டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி.. ஆதாரம் இருக்கு.. பிரகாஷ் ஜவடேகர் பகீர் பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்றும், அதற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சட்டசபைக்கு வரும் 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.

Prakash javadekar called Delhi Chief Minister Arvind Kejriwal terrorist

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவினர் தன்னைத் தீவிரவாதி என்று அழைத்து வருவதாகவும் ஆனால் நான் டெல்லி மாநிலத்துக்கு முதல்வர் என்றும் கூறினார். பல மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்திருப்பார்கள், சிலர் பாஜகவுக்கு வாக்களித்திருப்பார்கள் ஆனால் நான் கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நல்லது செய்து வருகிறேன். நீங்கள் என்னை தீவிரவாதி என்று நினைத்தால் தாமரை சின்னத்தில் ஓட்டுப்போடுங்கள். நான் உங்களின் மகன் என்று நினைத்தால் ஆம் ஆத்மி சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்திருந்தார்.

1-ம் வகுப்பு படித்த 6வயது சிறுமியை நாசமாக்கி கொலை செய்த சிறுவர்கள்.. வேடசந்தூர் அருகே ஷாக்1-ம் வகுப்பு படித்த 6வயது சிறுமியை நாசமாக்கி கொலை செய்த சிறுவர்கள்.. வேடசந்தூர் அருகே ஷாக்

இந்த நிலையில்தான் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரவாதி தான் என்றும், அதற்கு நிறைய ஆதாரம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை அடிக்கடி ஒரு போராட்டக்காரர் என்று கூறிக் கொள்வதாகவும், போராட்டக்காரர்களுக்கும், தீவிரவாதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் அப்பாவி முகத்தில் ஒளிந்து கொண்டு இருப்பதாகவும் பகீர் குற்றச் சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

முன்னதாக பாஜக எம்பி பர்வேஷ் வர்மா, கெஜ்ரிவாலை தீவிரவாதி என்று அழைத்திருந்தார். இது தொடர்பாக ஆம் ஆத்மி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் பர்வேஷ் வர்மாவுக்கு 96 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Minister Prakash javadekar called Delhi Chief Minister Arvind Kejriwal terrorist and he has enough evidence is there to prove his claim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X