டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்எஸ்எஸ் முகாமில் முதல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்.. மதசார்பின்மை குறித்து பேச்சில் சாதுர்யம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமுக்கே சென்று சகிப்புத்தன்மை, மதசார்பின்மை, பன்முகத்தன்மை குறித்து பிரணாப் முகர்ஜி பேசியது பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது.

Recommended Video

    Pranab Mukherjee Passed away | Oneindia Tamil

    ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியை கட்சி பேதமின்றி கொண்டாடினார்கள் என்றால் அதற்கு காரணம் அவருடைய குணாதிசயங்கள்தான். இந்த குணங்கள்தான் ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த பிறகும் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழாவுக்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அவரும் கலந்து கொண்டார். ஆர் எஸ் எஸ் விழாவில் கலந்து கொண்ட முதல் முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றவர். இவர் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

    தமிழகத்துக்கு ஒரு ஜல்லிக்கட்டு.. கர்நாடகாவிற்கு ஒரு கம்பாலா.. கலாச்சார காவலன் பிரணாப் செய்தது என்ன? தமிழகத்துக்கு ஒரு ஜல்லிக்கட்டு.. கர்நாடகாவிற்கு ஒரு கம்பாலா.. கலாச்சார காவலன் பிரணாப் செய்தது என்ன?

    பெருமை

    பெருமை

    இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத் தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம்.

    இந்தியா

    இந்தியா

    பல்வேறு இனம், மொழி மற்றும் மதங்களை பின்பற்றும் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். எனவே மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியமானதாகும். அது இல்லாவிட்டால் சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து வரும் தனித்துவ அடையாளம் நீர்த்து போகும்.

    சித்தாந்த ரீதியில்

    சித்தாந்த ரீதியில்

    மத ரீதியிலோ அல்லது சித்தாந்த ரீதியிலோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும் சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே வன்முறைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என பிரணாப் தெரிவித்திருந்தார்.

    மதசார்பின்மை

    மதசார்பின்மை

    அன்றைய காலகட்டத்தில் பாஜக, ஆர் எஸ் எஸ் ஆகிய கட்சிகளுக்கு சகிப்புத்தன்மை இல்லை என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களின் நிகழ்ச்சிக்கே போய் மதசார்பின்மை, சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பிரணாப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவரது பேச்சை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.

    English summary
    Ex President of India Pranab Mukherjee participated in RSS training function. He spoke about secularism.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X