பிரசாந்த் கிஷோர் சாபமிடுகிறாரா? காங்கிரஸில் பெருந்தலைகள் நிறைய இருக்கு..தானே மீண்டு விடுமாம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் பெரிய தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர்; அந்த கட்சி தானாகவே மீண்டு எழும் என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் மீதான நம்பிக்கையில் இப்படி பிரசாந்த் கிஷோர் இப்படி சொன்னாரா? அல்லது காங்கிரஸ் மீதான கடுப்பில் இப்படி சாபமிடுவது போல் அவர் கூறினாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
2024 லோக்சபா தேர்தல், அதற்கு முந்தைய மாநில சட்டசபை தேர்தல்களை இலக்கு வைத்து காங்கிரஸ் மேலிடம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் இப்போதுதான் கட்சி மறுசீரமைப்புகளில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுடியாக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு முன்னதாக காங்கிரஸில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றன. பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஆலோசனையின்படியே சில குழுக்களையும் காங்கிரஸ் மேலிடம் அமைத்தது.

பிரசாந்த் கிஷோர் மறுப்பு
ஆனால் திடீரென காங்கிரஸில் சேருவதற்கு பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். பிரசாந்த் கிஷோரைப் பொறுத்தவரை லோக்சபா தேர்தல் வேறு; மாநில சட்டசபை தேர்தல்கள் வேறு என்பது கருத்து. காங்கிரஸ் கட்சியோ இரண்டும் ஒன்றுதான் என கருதுகிறது. இதுதான் இரு தரப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டுக்கு அடிப்படை எனவும் கூறப்பாடுகிறது.

பல தலைவர்கள் இருக்காங்க..
இந்நிலையில் ஆஜ்தக் தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது: காங்கிரஸின் எதிர்காலம் தொடர்பான பல திட்டங்களில் காங்கிரஸ் மேலிடத்துக்கும் எமக்கும் புரிதல்கள் இருந்தன. ஆனால் காங்கிரஸில் நிறைய தலைவர்கள் உள்ளனர். அவர்களால் அதனை செய்ய முடியும். அவர்களுக்கு நான் தேவைப்படவில்லை. காங்கிரஸில் இணைய சொன்னார்கள்.. நான் இணைய மறுத்துவிட்டேன்.

அந்த சந்தேகம்
காங்கிரஸ் கட்சிக்கு என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ அதை சொல்லிவிட்டேன். 2014-ம் ஆண்டு தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி இப்போதுதான் கட்சி கட்டமைப்பு மாற்றம் குறித்து விவாதிக்கிறது. கட்சியின் முதன்மையான குழுவில் என்னை இடம்பெறச் செய்ய அவர்கள் விரும்பினர். அது எனக்கு சில சந்தேகங்களை எழுப்பியது.

யார் தலைவர்?
காங்கிரஸ் தலைமை தொடர்பாக எங்களுடைய பார்முலா ஒன்று அக்கட்சியிடம் தரப்பட்டது. ஆனால் அதில் ராகுல் காந்திதான் தலைவராக வேண்டும்; பிரியங்கா காந்திதான் தலைவராக வேண்டும் என்றெல்லாம் எதுவும் சொல்லப்படவில்லை. காங்கிரஸ் மேலிடத்தில் கட்சி தலைமை தொடர்பாக தெரிவித்த பார்முலாவை பகிரங்கப்படுத்தவும் முடியாது. காங்கிரஸில் ராகுல் காந்தி என்ன பதவி வகிக்க வேண்டும் என்பதை நான் எப்படி தீர்மானிக்க முடியும்? பாஜகவினரின் கடுமையான தாக்குதல்களால் மோசமடைந்திருக்கும் ராகுல் காந்தியின் இமேஜ் மீள கட்டமைக்கப்படக் கூடிய ஒன்றுதான். 2002-ம் ஆண்டு மோடியின் இமேஜ் எப்படி இருந்தது.. இப்போது எப்படி தலைகீழாக மாறி இருக்கிறது? இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.












Click it and Unblock the Notifications