டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி.. எக்ஸிட் போலை பார்த்து துள்ளி குதிக்கும் திமுக.. செம காரணம் இருக்கு!
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளுமே ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்று கணித்துள்ளன.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி சுமார் 50 தொகுதிகளில் வெற்றிபெறும் என்பது தான் அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளையும் கூட்டி சராசரியாக மாற்றினால் கிடைக்கக்கூடிய விடை.
கடந்த வருடம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 7 தொகுதிகளிலும் க்ளீன் ஸ்வீப் செய்தது பாஜக. ஆனால் 12 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் அளவிற்கு, ஆம் ஆத்மி, அமோக வெற்றி பெறும் என்று கணிக்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.

திமுக ஹேப்பி
இங்குதான் திமுகவினர் மகிழ்ச்சி அடையக் கூடிய ஒரு தகவல் ஒளிந்து கொண்டு இருக்கிறது. வட மாநிலத்தில் உள்ள டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி வெற்றி பெறுவதற்கும், தென்னகத்தின் தமிழ்நாட்டிலுள்ள திமுகவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? இருக்கிறது.. என்னதான் அரவிந்த் கேஜ்ரிவாலின் வியூகங்கள் மற்றும் ஆம் ஆத்மி அரசின் நலத்திட்டங்கள் வாக்குகளாக மாறியிருந்தாலும், இந்த வெற்றியின் பின்னணியில் ஒரு முக்கிய நபர் உள்ளார்.

பிரசாந்த் கிஷோர்
அந்த நபர் பெயர் பிரசாந்த் கிஷோர்.. சிலருக்கு இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது மாதிரி இருக்குமே? பலருக்கும் அது யார் என்பது புரிந்திருக்குமே? ஆம்.. திமுக வரும் சட்டசபை தேர்தல் வியூகத்திற்காக, ஒப்பந்தம் செய்துள்ளதே, அதே பிரசாந்த் கிஷோர் தான். இவரின், I-PAC நிறுவனத்துடன்தான், திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. ஆம் ஆத்மியை பொறுத்தளவில் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதிதான், இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. ஐபேக் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்து கொண்டன.

போட்டி
பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா போன்றோரின் தீவிர பிரச்சாரத்திற்கு, நடுவேயும், பாஜக மத்தியில் ஆட்சி செய்யும் நிலையிலும், காங்கிரஸ், வாக்குகளை பிரித்த போதிலும், ஆம் ஆத்மி அமோக வெற்றி பெறும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு பிரசாந்த் கிஷோர் ஒரு முக்கியமான காரணம் தானே! தமிழகத்திலும் கூட வரும் சட்டசபை தேர்தல் என்பது வித்தியாசமான தேர்தல் களமாக இருக்கப்போகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடதுசாரி கொள்கை கொண்டதாக அறியப்படுகிறது.

தமிழகம்
இப்படியான நிலையில் வாக்குகள் பிரியும். அது திமுகவுக்கு பாதகமாக முடியும் என்று பல அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில்தான் பிரசாந்த் கிஷோர் திமுக வெற்றிக்காக கைகோர்த்துள்ளார். ஏற்கனவே அவர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியை ஆட்சிக்கு வர வைத்தது போல, இதோ இப்போது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கரத்தை வலுப்படுத்தியுள்ளதைபோல ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர வைப்பார் என்று குதுகலிக்கிறார்கள் திமுக உடன் பிறப்புகள்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications