திமுகவின் அதே பாணி.. டெல்லியில் ஜெயிக்க உதவுங்க.. கெஜ்ரிவாலுக்கும் உதவும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக்
டெல்லி: டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணியை ஆம்ஆத்மி தொடங்கி உள்ள நிலையில் டெல்லியில் வெற்றி பெற தேர்தல் வியூக பிரசாந்த் கிஷோர் உருவாக்கிய ஐ-பேக் நிறுவனத்தை அந்த கட்சி நாடியுள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார். அதன்பிறகு டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழலில் அமலாக்கத்துறை கைதுக்கு பிறகு ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அந்த கட்சியின் அதிஷி முதல்வராக உள்ளார்.

விரைவில் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது 2025 பிப்ரவரி மாதம் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு 2025ம் ஆண்டின் ஜனவரி மாதம் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பணியை ஆம்ஆத்மி கட்சி தொடங்கி விட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதேபோல் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்து தான் போட்டி என்று அவர் அறிவித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார். டெல்லியில் கடந்த 2015 முதல் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது.
2015, 2020 சட்டசபை தேர்தலில் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி வென்ற நிலையில் இப்போது 3வது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் ஆம்ஆத்மி கட்சி உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டு தொடர் ஆட்சியால் ஆம்ஆத்மி கட்சிக்கு எதிர்ப்பு அலை என்பது உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆம்ஆத்மி கட்சி திமுகவின் பாணியில் தேர்தல் வியூக நிறுவனமான ஐ-பேக்கை நாடியுள்ளது.
இந்த ஐ-பேக் நிறுவனம் தான் தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெல்லும் வகையில் வியூகம் வகுத்து கொடுத்தது. இந்த நிறுவனத்தை பிரசார வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தான் தொடங்கினார். தற்போது அவர் பீகாரில் ‛ஜன் சுராஜ்' என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளதால் இந்த நிறுவனத்தில் இருந்து தூரம் சென்றுள்ளார். இருப்பினும் அவரது குழுவை சேர்ந்தவர்கள் தான் தற்போது ஐ-பேக்கை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் டெல்லியில் பிரசார வியூகங்களை வகுத்து கொடுக்கும்படி ஆம்ஆத்மி கட்சி, ஐ-பேக் நிறுவனத்தை நாடியுள்ளது. இதுதொடர்பாக ஐ-பேக் சார்பில், வரும் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியுடன் ஐ-பேக் நிறுவனம் பார்ட்னராக இணைந்துள்ளது. கட்சியின் பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்து மீண்டும் ஆட்சியில் அமரும் வகையில் அந்த கட்சி எங்களுடன் இணைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு டெல்லியின் களநிலவரம் மற்றும் டிஜிட்டல் பிரசாரங்களை முன்னெடுக்கும் ஐ-பேக் குழுவினர் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளனர். இந்த டீமில் 40 முதல் 50 பேர் இருப்பார்கள். அதன்பிறகு மேலும் கூடுதலாக ஐ-பேக் குழுவினர் செல்வார்கள். மொத்தம் 70 முதல் 80 நாட்கள் வரை இந்த குழுவினர் ஆம்ஆத்மி கட்சிக்காக டெல்லியில் பணியாற்ற உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஐ-பேக் நிறுவனத்துடன் ஆம்ஆத்மி கட்சி கூட்டு சேர்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2020 சட்டசபை தேர்தலின்போது ஆம்ஆத்மி கட்சிக்கு ஐ-பேக் நிறுவனம் தான் பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்தது. மொத்தம் 70 தொகுதிகள் உள்ள டெல்லி சட்டசபையில் அந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. இது முந்தைய 2015 தேர்தலை ஒப்பிடும்போது ஆம்ஆத்மி கட்சி 2020ல் 5 இடங்களை இழந்தாலும் கூட தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. இதனால் தான் மீண்டும் ஐ-பேக் நிறுவனம் மீண்டும் ஆம்ஆத்மி கட்சிக்கு வியூகங்களை வகுத்து கொடுக்க உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications