டிரம்ப்பால் இந்திய மக்களுக்கு ‛லக்'.. இனி மலிவு விலையில் இறால் கிடைக்கும்! மத்திய அரசு மெகா பிளான்
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்து அங்கு செல்லும் இறால் ஏற்றுமதி பெரிய அளவில் சரிவை சந்திக்க உள்ளது. இந்நிலையில் தான் இறால் சார்ந்த தொழிலில் இருப்போரை பாதுகாக்க மத்திய அரசு சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நம் நாட்டில் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் தரமான இறால்கள் கிடைக்க உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட உள்ளது. அதன்படி ஜவுளி, தங்க நகைகள், தோல் சார்ந்த தொழில், ரத்தினங்கள், கடல் உணவு சார்ந்த தொழில்கள் பெரும் அபாயத்தில் உள்ளன.

டிரம்பின் வரியால் அமெரிக்காவுக்ககடல் உணவுகள் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக இறால் ஏற்றுமதி சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் தான் இறால் உற்பத்தியாளர்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் இறால் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இறால் விவசாயிகள், தீவன உற்பத்தியாளர்கள் மற்றும்ஏற்றுமதி சந்தையை மேம்படுத்துவதற்கான கடல்சார் பொருட்கள் ஏற்றுமதிக்கான மேம்பாட்டு ஆணையத்தை (MPEDA)சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு நம் நாட்டில் இறால் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான திட்டங்களை ஆராய்ந்து பரிந்துரை செய்துள்ளது.
இதுபற்றி குழுவின் தலைவரும் என்எஃப்டிபியின் மூத்த நிர்வாக இயக்குநருமான எஸ் கண்ணப்பன் கூறுகையில், ‛‛இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஜப்பான் போன்ற ஒரு நாட்டில் தனிநபர் இறால் நுகர்வு கிட்டத்தட்ட பாதியாக இருக்கிறது. இந்த விழிப்புணர்வுக்காக ஸ்டால்கள் அமைப்பது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது'' என்றார்.
அதேபோல் இறால் விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‛‛இறால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான மதிப்பைப் பெறுவதற்கான ஒரே வழி வலுவான உள்நாட்டு சந்தை மட்டுமே. இதன்மூலம் நம் நாட்டு மக்கள் உலகின் சிறந்த இறாலை ருசிக்க முடியும்'' என்றார்.
இதன்மூலம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரியும்போது இந்தியாவில் இறால்கள் அதிகம் இருக்கும். அது உள்நாட்டு மார்க்கெட்டுக்கு வரும்போது விலையும் குறையும். மலிவு விலையில் இறால்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் கிடைக்கும். இருப்பினும் இது இறால் விவசாயிகளுக்கான லாபத்தை குறைக்கும். ஆனாலும் கூட அமெரிக்காவின் வரியால் இறால் விவசாயிகளுக்கு ஏற்படும் கடும் நஷ்டத்தை உள்ளூர் சந்தை மூலமாக ஓரளவு ஈடுசெய்ய முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications