இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் உட்பட.. சர்வ மத பிரார்த்தனையோடு நடந்த நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழா
டெல்லி: டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியபோது, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பவுத்தம், சமணம் உள்ளிட்ட அனைத்து மத முறைப்படி பிரார்த்தனைகள் நடைபெற்றது கவனம் ஈர்த்தது.
Recommended Video

ஏற்கனவே உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லை என்பதால் புதிதாக அதே இடத்திற்கு அருகே நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

டாடா நிறுவனத்துக்கு இந்த கட்டுமான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும், இரண்டு வருடங்களில் நாடாளுமன்றக் கட்டிடம் கட்டும் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம், இந்த நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்துள்ளது. அதே நேரம் பூமி பூஜை செய்து கொள்ள அனுமதி வழங்கியிருந்தது.
#WATCH: 'Sarva Dharma Prarthana' being performed by various religious leaders at the foundation stone laying ceremony of the new Parliament building, in Delhi. https://t.co/6NDd8e8B3p pic.twitter.com/1DRGf37tJV
— ANI (@ANI) December 10, 2020
இதன்படி, இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம், பௌத்தம், சமணம் உள்ளிட்ட பல மதத்தை சேர்ந்த ஆன்மீகத் தலைவர்கள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் தங்களது மத முறைப்படி வழிபாடுகள் செய்தனர். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. நாட்டின் இறையாண்மை நாடாளுமன்ற கட்டிடம் என்பதால் அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்து, இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று உள்ளது கவனம் ஈர்ப்பதாக அமைந்தது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications