இனி கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி.. செய்ய வேண்டியது என்ன?
டெல்லி: இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் கோவின் செயலி மூலம் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு நேராக சென்றோ பெறலாம்.
கொரோனா தடுப்பூசியை இதுவரை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு போடப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கர்ப்பிணிகளை தாக்கும் கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக தற்போது ஆய்வுகள் கண்டறிந்தன.

இந்த நிலையில் அவர்களும் தடுப்பூசி போட்டு கொள்வது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவானது கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடலாம் என பரிந்துரைத்தது.
இதையடுத்து இந்த தகவல் இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தெரிவிக்கப்பட்டன. அதன்படி கர்ப்பிணிகள் நேரடியாகவோ அல்லது கோவின் செயலி மூலம் பதிவு செய்தோ தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் தாயும் சேயும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்படுவர்.
கர்ப்பம் அடைந்த நாளிலிருந்து எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்த பாதிப்பையும் கொடுக்காது. தடுப்பூசியால் தாய்க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் குழந்தைக்கும் அது செல்லும்.
தடுப்பூசி போட்ட பிறகு கர்ப்பிணிகளுக்கு தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக அவரை தடுப்பூசி போட்ட மையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். அங்குள்ள மருத்துவக் குழுவினர் திடீர் உடல்நலக் குறைவுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து சிகிச்சை தருவர்.
கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்பூட்னிக், மாடர்னா உள்ளிட்ட ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் போட்டுக் கொள்ளலாம். இவை பாதுகாப்பானவையாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications