18-வது லோக்சபாவின் முதல் கூட்டம் ஜூன் 24-ல் கூடுகிறது! ஜூன் 27-ல் ஜனாதிபதி உரை!
டெல்லி: 18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் ஜூன் 24-ந் தேதி தொடங்கி ஜூலை 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.லோக்சபாவில் ஜூன் 24, 25-ந் தேதிகளில் புதிய எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் 27-ந் தேதி உரையாற்றுகிறார்.
18-வது லோக்சபா தேர்தல் முடிவடைந்து நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் துறைகளின் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் 18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டம் வரும் 24-ந் தேதி தொடங்குகிறது. ஜூன் 24-ந் தேதி தொடங்கும் இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 7-ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல் 2 நாட்கள் அதாவது ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர். தற்காலிக சபாநயார் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார். ராஜ்யசபா ஜூலை 27-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
நாடாளுமன்றம் கூடுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ வெளியிட்டுள்ளார்.
இதனிடையே லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஜூன் 26-ந் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. லோக்சபா சபாநாயகர் பதவியைப் பெறுவதில் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் முட்டி மோதுகின்றன. ஆனால் இந்த இரு கட்சிகளுக்குமே லோக்சபா சபாநாயகர் பதவியை விட்டுக் கொடுக்க பாஜக தயாராக இல்லையாம். லோக்சபா துணை சபாநாயகர் பதவியை வேண்டுமானால் தெலுங்குதேசம் கட்சிக்கு தரலாம் என்பது பாஜகவின் திட்டமாம். பாஜக தரப்பில் என்டி ராமாராவ் மகளும் ஆந்திரா பாஜக தலைவருமான புரந்தரேஸ்வரி எம்பியை லோக்சபா சபாநாயகராக நியமிக்கக் கூடும் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications