இன்று நாடு முழுவதும் உற்சாகமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்- ஜனாதிபதி வாழ்த்து
டெல்லி: நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்து மத பண்டிகைகளில் முக்கியமான ஒன்று விநாயகர் சதுர்த்தி. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
பொதுவாக விநாயகர் சதுர்த்தியின் போது ஒருவார காலம் பொது இடங்களிலும் வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். அதன்பின்னர் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்.
இந்த ஆண்டு நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு வெளியூர் செல்லும் பொதுமக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா திருத்தேரோட்டம் கொட்டும் மழையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள உலக பிரசித்திபெற்ற குடைவரைக் கோவிலான பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவரான கற்பக விநாயகர், தினமும் பல்வேறு வெள்ளி வாகனங்களில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். விழாவில் முக்கிய நாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. பெரிய தேரில் உற்சவரான ஸ்ரீ கற்பக விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோன்று சிறிய தேரில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் அருள்பாலித்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தமது வாழ்த்துச் செய்தியில் விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது. விநாயகப் பெருமான், விக்னஹர்தராகவும், மங்கலமூர்த்தியாகவும் கருதப்படுகிறார். இந்த தருணத்தில் அன்பு, அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம் என கூறியுள்ளார்.
இதேபோல் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, நான் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறிவு மற்றும் செழுமையின் கடவுளான விநாயகர் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தியாக பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தில் முழு முதல் கடவுளாக ஒவ்வொரு பக்தர்களாலும் விநாயகர் போற்றப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சாதி, நம்பிக்கை, மதம் அல்லது பிராந்திய எல்லைகளைக் கடந்து, இந்தியாவின் ஒருங்கிணைந்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. இந்நன்னாளில் அனைவரும் நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வளமையுடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications