4 நாள் பயணமாக உ.பி செல்லும் குடியரசு தலைவர்.. அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தை பார்வையிடுகிறார்
டெல்லி: நான்கு நாள் பயணமாக அயோத்தி செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்யவுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஜூன் மாத இறுதியில் ரயில் மூலம் உத்தர பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார். கடந்த 2006இல் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ரயில் மூலம் டேராடூன் சென்றிருந்தார்.

குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர் 15 ஆண்டுகளுக்குப் பின் ரயில் பயணம் மேற்கொண்டது அதுவே முதல்முறையாகும். இந்நிலையில், நான்கு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் நாளை மீண்டும் உத்தரப் பிரதேசம் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் உத்தரப் பிரதேசத்திலுள்ள லக்னோ செல்லும் குடியரசுத் தலைவர் அங்கு இரண்டு பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார். மேலும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் டாக்டர் சம்பூர்ணானந்தின் சிலையைத் திறந்து வைக்கிறார்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி கோரக்பூர் உபி அரசின் சில திட்டங்களைத் தொடங்கி வைக்கும் அவர், ஆகஸ்ட் 29ஆம் தேதி சிறப்பு ரயில் மூலம் அயோத்தி செல்கிறார். அங்குக் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிடுகிறார்.

மேலும், அயோத்தி ராம் கதா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமாயண மேளாவையும் அவர் தொடங்கி வைக்கிறார். இது தவிர ஜென்மாஸ்டமியை முன்னிட்டு அயோத்தி ராம் லல்லா கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு நடத்துகிறார்.
இதுவரை குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்கள் பொதுவாக இதுபோன்ற மத ரீதியிலான வழிபாடுகளில் பங்கேற்க மாட்டார்கள். ஆனால் தற்போது முதல்முறையாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இதுபோன்ற வழிபாடுகளில் பங்கேற்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications