2 நாள் விசிட்! பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு நாளை பயணம்! அஜெண்டா இதுதான்! ஏன் முக்கியம் தெரியுமா?
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா செல்கிறார். சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி செல்வது இது மூன்றாவது முறையாகும். நாளை சவுதி அரேபியா புறப்படும் பிரதமர் மோடி, பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக நாளை (ஏப்ரல் 22) சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா செல்லும் பிரதமர் மோடி, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது, முதலீடுகளை ஊக்குவிப்பது, எரிசக்தி விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3வது முறையாக சவுதி அரேபியா பயணம்
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது இந்த விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கலாம் என்று தெரிகிறது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இருதரப்பு சந்திப்பு மட்டும் இன்றி, பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். சவுதி அரேபியாவில் இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி செல்வது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பாக கடந்த 2016மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் , சவுதி அரேபியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு இருந்தார். பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: -
ஏன் முக்கியத்துவம்
இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் முறையாக கூட்டு படைகளின் பயிற்சி நடைபெற்றது. கடற்படை பயிற்சி இருமுறை நடைபெற்றுள்ளது. முப்படை சேவைகளிலும் அவ்வப்போது பயிற்சி, திறன் மேம்பாடு ஆகியவை குறித்து பரிமாற்றங்களை செய்து வருகிறோம்" என்றார். சவுதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே, ஆழமான நட்புறவு நீடிக்கிறது.
அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவு நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மோடியின் கனவுத்திட்டம்
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மான் பங்கேற்று இருந்தார். அப்போது, தங்கள் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முகம்மது பின் சல்மானின் இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டின் போது மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த திட்டத்தில், இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டடன.
14 நாட்களில் செல்ல முடியும்
6,000 கி.மீ. நீளம் கொண்ட இந்த வழித்தடம் மும்பை, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜபல் அலி, அல் குவைபத், சவுதி அரேபியாவின் ஹரத், ரியாத், அல் ஹதீதா, இஸ்ரேலில் உள்ள ஹைபா நகரம், கிரீஸ் நாட்டின் பிரேயஸ் ஆகிய நகரங்களை கடல் வழி, சாலை, ரயில் பாதை வழியாக இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இருந்து புறப்படும் ஒரு கப்பல் ஜெர்மனிக்கு செல்ல வேண்டும் என்றால் 36 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
ஐ.எம்.இ.சி எனப்படும் மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தால் 14 நாட்களில் செல்ல முடியும். இதனல, பயண நேரம் 40 சதவீதம் மிச்சமாகும். இஸ்ரேல் - ஹமாஸ் போரால் தாமதம் ஆன இந்த திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் வேகம் எடுத்து உள்ளது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications