இந்தோனேஷிய நிலக்கரி இந்தியாவில் டபுள் ரேட்! ஏழைகள் பணத்தை அதானி எடுப்பது இப்படித்தான்- ராகுல் காந்தி
டெல்லி: மின் கட்டண உயர்வுக்கு அதானியே காரணம் என்றும், பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு வெற்று காசோலையை கொடுத்து இருப்பதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதானி இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்கி அதனை இந்தியாவிற்கு கொண்டு வரும் பொழுது அதன் விலையை இரண்டு மடங்காக உயர்த்துகிறார். அதன் மூலமாகவே நாட்டில் மின்சார கட்டண உயர்வை ஏற்படுகிறது. ஏழை மக்களுடைய பணத்தினை இந்த வகையில் அதானி நேரடியாக பறித்து வருகிறார். ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் மக்கள் கூடுதல் பணம் செலுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலமாக மட்டும் 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்து உள்ளது. இம்முறை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து திருட்டு நடந்து இருக்கிறது. நீங்கள் ஸ்விட்சை அழுத்தினால் அதானியின் பாக்கெட்டில் பணம் விழும். இது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் இது குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால், இந்தியாவில் எதுவுமே நடக்கவில்லை.

இதன் பின்னணியில் அதானி இருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் பினான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது." என்று கூறிய ராகுல் காந்தி அந்த பத்திரிகையை செய்தியாளர்களை முன் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "அதானிக்கு பிரதமர் நரேந்திர மோடி வெற்று காசோலை (Blank cheque) கொடுத்து இருக்கிறார். மோடி அதானிக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறார். நாட்டில் உள்ள அனைத்து துறைகளில் இருந்தும், ஒவ்வொரு இந்திய குடிமக்களின் வருமானத்தில் இருந்தும் அதானிக்கு பங்கு சென்று வருகிறது.

அதானி ஏழை எளிய மக்களின் பணத்தை எடுக்கிறார். இது நேரடி திருட்டு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது தொடர்பான விசாரணையை தொடங்குவோம்." என்று தெரிவித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், இந்தியா கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தொழிலதிபர் கௌதம் அதானியை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அதானியை சந்தித்தது பற்றி நான் அவரிடம் கேட்கவில்லை என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"கிளப்ஃபுட்" பாதித்த 10,000 குழந்தைகளுக்கு சிகிச்சை.. அதானி + அனுஷ்கா அறகட்டளைகள் அறிவிப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications