சிவிங்கி புலியை அறிமுகப்படுத்துவது முதல் ஐஐடி பட்டமளிப்பு விழா வரை...பிரதமரின் இன்றைய பிளான்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமரின் 72வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

பிறந்தநாளையொட்டி, நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சிவிங்கி புலிகள் மத்தியப் பிரதேசத்தில் விடுவதற்காக பிரதமர் மோடி அங்கு செல்கிறார். இதனையடுத்து இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.

இதன் தொடர்ச்சியாக மேலும் மூன்று இடங்களில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

 நான்கு சிறப்புரைகள்

நான்கு சிறப்புரைகள்

பிரதமரின் 72வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இன்று முதல் அக்டோபர் 2ம் தேதி வரை மோடி பிறந்தநாளை பாஜக கொண்டாட திட்டமிட்டுள்ளது. மேலும், பிரதமரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல நமோ மொபைல் போன் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று நான்கு இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

சிவிங்கி புலி

சிவிங்கி புலி

முதலில் இன்று காலை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ உயிரியல் பூங்காவுக்கு சென்று அங்கு, உலகின் பெரிய பூனை இனங்களில் ஒன்றான சிவிங்கி (Cheetah) புலியை பூங்காவில் விடுகிறார். இந்தியாவில் 1952க்கு பின்னர் இந்த புலி இனம் இல்லை. அதற்கு முன்னதாகவே மன்னர்களால் வேட்டையாடப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்த புலி இனத்தை இந்தியாவில் மறு அறிமுகம் செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது.

சுய உதவிக் குழு பெண்களுடன்

சுய உதவிக் குழு பெண்களுடன்

இதற்கு நீதிமன்றமும் அனுமதியளித்த நிலையில் இன்று குனோ தேசிய உயிரியல் பூங்காவில் இந்த சிவிங்கி புலிகள் விடப்படுகின்றன. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதனையடுத்து, மத்தியப் பிரதேசத்தின் காரஹால், ஷியோபூரில் சுய உதவிக்குழு பெண்களிடையே பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் சுயஉதவி குழுவின் ஆயிரக்கணக்கான பெண்கள் இதில் பங்கேற்கின்றனர்.

தேசிய தளவாடக் கொள்கை

தேசிய தளவாடக் கொள்கை

இதன் தொடர்ச்சியாக விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு ஐடிஐ மாணவர்களின் முதல் பட்டமளிப்பு விழாவில் மோடி மாணவர்களிடையே உரையாற்றுகிறார். இந்த நிகழ்வில் சுமார் 40 லட்சம் மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. இறுதியாக இன்று மாலை, National Logistics Policy எனப்படும் தேசிய தடவாளக் கொள்கையை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். சமீபத்தில் இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த கொள்கைகளை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+