Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகின் மிக மூத்த மொழியாக தமிழ் திகழ்கிறது என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் - பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி : உலகின் மிக மூத்த மொழியாக தமிழ் திகழ்கிறது என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் எனவும், அதனால் வரலாற்று சிறப்பு வாய்ந்த தமிழகத்திற்கு சீன அதிபரை அழைத்துச் சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் மற்றும் பட்ஜெட் தாக்கல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரத்தியேகப் பேட்டி அளித்தார்.

கலந்துரையாடலில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக பெரும் பெரும்பான்மையுடன் நிச்சயம் வெற்றி பெறும் என கூறியதோடு, மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு குறித்தும் பேசினார்

முதல் அமைச்சராக பணி

முதல் அமைச்சராக பணி

முதல் அமைச்சராக பணியாற்றி உள்ளதால் மாநிலங்களின் தேவையை சரிவர அறிந்து அதற்காக செயலாற்றுகிறேன் என பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களை ஊக்குவிக்கவே வெளிநாட்டு தலைவர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார். சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினருக்குமான திட்டங்களை திட்டுகிறோம் எனவும், நாட்டைத் துண்டாக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளின் சதியில் மக்கள் சிக்க மாட்டார்கள் என்றார்.

விவசாயிகளின் இதயங்கள்

விவசாயிகளின் இதயங்கள்

நான் விவசாயிகளின் இதயங்களை வெல்வதற்காக வந்துள்ளேன், அதை செய்தேன் என பேசிய பிரதமர், சிறு விவசாயிகளின் வலி எனக்கு புரிகிறது எனவும், விவசாயச் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டதாகவும் ஆனால் தேசிய நலன் கருதி அவை திரும்பப் பெறப்பட்டதாகவும் நான் கூறியிருந்தேன் என்றார். ஊழல் வழக்குகளில் தேசிய சொத்துக்களை மீட்டெடுக்கும் புலனாய்வு அமைப்புகள் மற்றும் அரசாங்கத்தை பாராட்ட வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.

பெண்களுக்கு பாதுகாப்பு

பெண்களுக்கு பாதுகாப்பு

உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக மற்றும் யோகி ஆதித்யநாத் ஆட்சி குறித்து பேசிய பிரதமர், இன்று பெண்கள் இருட்டிய பிறகும் வெளியே செல்லலாம் என்று கூறுகிறார்கள். இந்த நம்பிக்கை பாதுகாப்புக்கு அவசியம். உ.பி.யில் ஒரு காலத்தில் குண்டர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், இன்று அவர்கள் சரணடைகின்றனர். யோகி ஜி பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து அதில் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றார். கடந்த ஆண்டுகளைப் போலவே வரும் தேர்தலில் உபி மக்கள் பாஜகவை நம்பி வாக்களிப்பார்கள் எனவும் பிரதமர் கூறினார்.

மிக மூத்த மொழி

மிக மூத்த மொழி

சீன அதிபரை தமிழ்நாட்டுக்கும் பிரான்ஸ் அடிப்படை உத்திரப் பிரதேச மாநிலத்திற்கும் அழைத்துச் சென்றோம் என்பதை சுட்டிக் காட்டிய அவர் , உலகின் மிக மூத்த மொழியாக தமிழ் திகழ்கிறது என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+