இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. நெதன்யாகுவுடன் பேசிய பிரதமர் மோடி! செங்கடலில் அமைதியை மீட்க முயற்சி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், போர் சூழல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.

சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த அக். 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

Prime Minister Narendra Modi talks with Netanyahu about Israel-Hamas war

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஐநா பொதுச் சபையில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் காசாவில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் இதுகுறித்து கூறுகையில்,

"காசா விஷயத்தில் மனிதாபிமான தலையீடு அவசியம். இரு நாட்டுத் தீர்வே இஸ்ரேல் - பாலஸ்தீன் சர்ச்சை நிரந்தரத் தீர்வாக இருக்கும்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் பேசியிருக்கிறார். இந்த உரையாடலில் போர் குறித்தும், கடல்வழி போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி x சோஷியல் மீடியா தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது குறித்தும் இந்தியா தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சமீப நாட்களாக அரபு நாடுகளை ஒட்டியுள்ள செங்கடல் வழித்தடத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நீண்டு வருகிறது. இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்களை அவர்கள் கடத்தி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் கடல் போக்குவரத்து ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. இந்நிலையில்தான் பிரதமர் மோடி, நெதன்யாகு உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த உரையாடல் மூலம் இரு நாடுகளும் சேர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வந்திருக்கலாம் எனவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+