ஊழலா? ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! யாரா இருந்தாலும் தப்ப முடியாது! பிரதமர் மோடி எச்சரிக்கை!
டெல்லி : அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் நாடாக மாற்றுவது ஒவ்வொருவரின் கடமை எனவும், தனிநபராக இருந்தாலும் அல்லது ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி ஊழலில் ஈடுபடும் யாரும் தப்பவே முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
குஜராத் முதல்வராக இருந்து தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி தொடர்ந்து ஊழலுக்கு எதிராக பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். குஜராத் மாடலை வைத்து ஆட்சியைப் பிடித்த பிறகு தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருக்கிறது பாஜக.
இன்னும் இரு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலை இந்தியா சந்திக்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக குஜராத் சட்டமன்றத் தேர்தலும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கின்றன. இது நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகையாகவே பார்க்கப்படுகிறது.

ஊழலற்ற இந்தியா
இந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெறும் கட்சிகள் அதனை நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் ஒரு பகுதியாக பார்க்கப் போவது நிச்சயம். இதற்காக காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பலவும் தீவிர முனைப்பு காட்டி வரும் நிலையில் குஜராத்தை குறிவைத்து பல திட்டங்களை அறிவித்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அது மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை ஊழலற்ற இந்தியா என்பது பாஜகவின் கொள்கை பிரச்சாரங்களில் ஒன்றாக இருக்கிறது.

பாஜக கவனம்
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காமன் வெல்த், 2ஜி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தே பாஜக காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தது, தற்போது வரை அது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறிவரும் பாஜக தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்வதாக கூறுகின்றனர் பாரதிய ஜனதா கட்சியினர்,

ஊழல் விழிப்புணர்வு வாரம்
தான் பேசும் நிகழ்ச்சிகளிலும் ஊழல் குறித்த பேச்சு தான் இடம்பெற வேண்டும் என தனிக் கவனம் செலுத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில் இந்தியாவை 25 ஆண்டுகளுக்குள் வல்லரசு நாடாக உருவாக்க வேண்டியது அனைவரின் கடமை எனவும் ஊழலில் ஈடுபடும் யாரும் தப்ப முடியாது என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்த மாத இறுதியில் இருந்து அதாவது 31ஆம் தேதியிலிருந்து நவம்பர் 6ஆம் தேதி வரை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி
இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு செய்தியில்,"ஊழலை ஒரு சதவீதம் கூட சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையுடன் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. நேர்மையான ஒவ்வொரு நபரும் தங்களை பற்றி பெருமை கொள்ளும் நம்பிக்கையான சூழல் உருவாகி இருக்கிறது. இங்கு ஊழலில் ஈடுபடும் எந்த நபரோ அல்லது நிறுவனமோ தப்பிக்க முடியாது என்ற கொள்கையில் இந்தியா தெளிவாக உள்ளது. ஊழலை வேரறுக்க முழு செயல்முறையும் முழு அமைப்பும் வெளிப்படை தன்மை கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது மட்டுமல்ல இனி வரும் காலங்களிலும் எங்குமே ஊழலுக்கு வாய்ப்பே இல்லை. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவை மாபெரும் வளர்ந்த நாடாக மாற்றுவது ஒவ்வொருவரின் கடமை. தொழில்நுட்பம் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் இந்த அமைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications