பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன்... பிரதமர் நரேந்திர மோடி இன்று திடீர் ஆலோசனை.. காரணம் இது தான்
டெல்லி: பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.
Recommended Video
நாட்டின் எந்தப் பகுதியும் வளர்ச்சிப் பாதையில் இருந்து விலகிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த காணொலி கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் பல்வேறு திட்டங்களைத் துரிதமாக நிறைவேற்றுவதை இந்த கலந்துரையாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது

இதற்காக பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.
இந்த உரையாடலின் போது, மாவட்டங்களில் அரசுத் திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நேரடியாகக் கருத்துக் கேட்கிறார். செயல்திறனை மதிப்பாய்வு செய்யவும், எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறியவும் இது உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து பங்குதாரர்களுடனும் ஒன்றிணைந்து, மாவட்டங்களில் உள்ள பல்வேறு துறைகளின் பல்வேறு திட்டங்களை வேகமாகச் செயல்படுத்துவதை இக்கலந்துரையாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சமச்சீரற்ற தன்மையை நீக்கப் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அனைத்து குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்குமான அரசின் உறுதிப்பாட்டோடு இது இணைந்துள்ளது என்றும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications