180 கி.மீ வேகம்..வந்தே பாரத்துக்கே டஃப் கொடுக்கும் நமோ பாரத் ரயில்! பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
டெல்லி: மணிக்கு சுமார் 180 கி.மீ வேகத்தில் இயங்கும் நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவையை(ரேபிட் ரயில்) பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இது குறைந்த தொலைவில் உள்ள நகரங்களை இணைக்க உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையானது உலகில் இருக்கும் மிகப்பெரிய ரயில்வேக்களில் ஒன்றாகும். இதுவரை இது ஏராளமான சாதனைகளை செய்துள்ளது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து தற்போது புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. அதாவது, குறைந்த தூரங்களில் உள்ள நகரங்களை இணைக்க ரேபிட் ரயில் திட்டத்தை (RRTS) செயல்படுத்தியுள்ளது. உதாரணமாக டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்கு இடையே 82 கி.மீ இருக்கிறது. சாதாரணமாக பயண தூரம் 2-2.30 மணி நேரம் ஆகும். ஆனால் இதே ரேபிட் ரயிலில் வெறும் 1 மணி நேரத்தில் பயணிக்கலாம்.

இந்த ரயில் பார்ப்பதற்கு மெட்ரோவை போலவே இருக்கும். இருந்தாலும் இதன் வேகம் மணிக்கு 180 கி.மீ-ஐ எட்டும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். கடந்த 2005ம் ஆண்டு திட்ட கமிஷன், டெல்லிக்கு பல்வேறு விதமான போக்குவரத்தை உருவாக்க திட்டமிட்டது. அப்படிதான் இந்த ரேபிட் ரயில் உருவாக்கியுள்ளது. டெல்லியிலிருந்து-மீரட் வரை, டெல்லி-பானிபட் மற்றும் டெல்லி-ஆல்வார் ஆகிய நகரங்களையும் இந்த ரயில் விரைவில் இணைக்கும். இதற்காக மத்திய அரசு, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் இணைந்து நிதியை ஒதுக்கியுள்ளன.
இது பெரிய புராஜெக்ட் என்பதால் தற்போது டெல்லியிலிருந்து-மீரட் வரை உள்ள 82 கி.மீ தூரத்தில் 17 கி.மீக்கான பணிகள் முற்றிலுமாக முடிவடைந்துள்ளன. எனவே இந்த தொலைவில் உள்ள துஹாய் முதல் சாஹியாபாத் வரை இந்த ரேபிட் ரயில் இயக்கப்படுகிறது. இதைத்தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். பச்சை கொடி அசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இதே ரயிலில் மாணவர்களுடன் பயணித்துள்ளார். டெல்லியிலிருந்து-மீரட் முழு பாதையும் 2025ம் ஆண்டில் முடிவடையும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தற்போது இன்று இயக்கப்படும் ரயில் சாஹியாபாத், காஸியாபாத், குல்தார், துஹாய், துஹாய் டிப்போ ஆகிய ரயில் நிலையங்களை இணைக்கிறது.

மொத்தம் 6 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் தலா 72 இருக்கைகள் இருக்கிறது. தவிர மானிட்டரிங் சிஸ்டம், வைஃபை வசதி, தானியங்கி உணவுப் பொருட்கள் வழங்கும் ஏடிஎம் போன்ற வசதிகளும் இந்த ரயிலில் இருக்கின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முடிவுற்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications