3வது முறையாக பிரதமரான மோடி.. இன்று முதல் வெளிநாட்டு பயணம் .. சந்திக்க போகும் பெரும் தலைகள்
டெல்லி: ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் இன்று (13-ம் தேதி) தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி செல்கிறார்.
அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தலைமையின தேசிய ஜனநாயக கூட்டணி வென்று 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபுநாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் ஆகியவை முக்கிய இடம் பெற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் 9ம் தேதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். இதில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், சுரேஷ் கோபி, எல் முருகன் உள்பட மொத்தம் 71 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

பண்டிதர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு நாட்டில் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராகியுள்ள தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். 3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். ஜி 7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் நடைபெறுகிறது. இத்தாலியின் அபுலியா மாகாணத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவே பிரதமர் மோடி செல்கிறார்.
ஜி7 அமைப்பை பொறுத்தவரை உலகின் மிகவும் அதிகாரம் மிக்க அமைப்புகளில் ஒன்று. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் இன்று ( 13-ம் தேதி) முதல் 15-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரோன், ஜப்பான் பிரதமர் பூமியோ ஹிசாடியா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், உட்பட ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டை இத்தாலி அரசு நடத்துகிறது. மாநாட்டை நடத்தும் நாடானா இத்தாலி அரசு சார்பில் இந்தியா, சவுதிஅரேபியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வருமாறு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார்.
இந்த மாநாட்டில் உக்ரைன் போர், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது. பிரதமர் மோடி பொருளாதார வளர்ச்சி குறித்து ஜி7 உச்சி மாநாட்டில் பேசக்கூடும் என தெரிகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. .
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications