எம்பிக்கள் யாருமே நினைத்தே பார்க்க முடியாத சம்பள உயர்வு... பிரதமர் அலுவலகம் தந்த விளக்கம்
டெல்லி: எம்.பி.க்கள் மாதந்தோறும் ரூ.1 லட்சத்தை ஊதியமாக இதுவரை பெற்று வந்தார்கள். அவர்களது சம்பளம் மற்றும் தினப்படியை மத்திய அரசு 24 சதவீதமாக உயர்த்தியது. இதன் காரணமாக எம்.பி.க்கள் மாதந்தோறும் ரூ.1.24 லட்சம் சம்பளமாக பெறுவார்கள். எம்பிக்களின் சம்பள உயர்வு குறித்து விளக்கம் அளித்த பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருளாதார அளவீடுகள் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது.
இந்தியாவில் உள்ள 543 எம்பிக்களும் சம்பளம் என்று பார்த்தால், இதுவரை ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சம் என்கிற அளவில் இருந்து வருகிறது. அண்மையில் அவர்களது சம்பளம் மற்றும் தினப்படியை மத்திய அரசு 24 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதன்மூலம், இனி எம்.பி.க்கள் மாதந்தோறும் ரூ.1.24 லட்சம் சம்பளமாக பெறப்போகிறார்கள். சம்பள உயர்வு ஏன் என்பது குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

சம்பள உயர்வு குறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் 24 சதவீதம் உயர்த்தப்படுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் கடந்த மார்ச் 24-ந்தேதி அறிவித்திருந்தது. அதன்படி எம்.பி.க்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது 2023, ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது, இது பொதுமக்களிடம் பல்வேறு தவறான கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
2018-ம் ஆண்டுக்கு முன்பு, 2010-ம் ஆண்டு ஊதிய உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்போது எம்.பி.க்களின் மாத ஊதியம் 16 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்த முடிவு அப்போது விமர்சனத்திற்கு வழிவகுத்தது. ஏனெனில் எம்.பி.க்கள் 3 மடங்கு தங்களுக்கு தாங்களே ஊதிய உயர்வை வழங்கிக் கொண்டதாக பலர் கருதினார்கள். இருப்பினும், அப்போது முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட சில எம்.பி.க்கள் இந்த உயர்வு போதுமானதல்ல என்றும், குறைந்தது 5 மடங்கு ஊதிய உயர்வு வேண்டும் என்றும் கோரிக்கை
கொரோனா நோய் தொற்று பாதிப்பின்போது 2020 ஏப்ரல் மாதத்தில் எம்.பி.க்கள் மற்றும் மந்திரிகளுக்கு ஒரு ஆண்டு காலத்திற்கு 30 சதவீதம் ஊதியக் குறைப்பு நடவடிக்கையை அரசு செயல்படுத்தியது. அந்த நேரத்தில் தொற்றுநோயைக் கையாள்வதில் மத்திய அரசின் நிதி ஆதாரங்களை பெருக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே பல மாநிலங்களில் முதல்வர்கள் தங்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்குமான ஊதியத்தை தீர்மானிப்பதில் தன்னிச்சையான வழிமுறையை தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். சமீபத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தனக்கு தானே 100 சதவீதம் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு 50 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு தன்னிச்சையாக முதல்வர், மந்திரிகள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் சம்பளத்தை 50 சதவீதம் வரை உயர்த்தியது. 2023-ம் ஆண்டு, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு 136 சதவீதம் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்திருந்தார். எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதியம் 66 சதவீதமாக அதிகரித்திருந்தார்.
அதேபோல், 2023-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு எம்.எல்.ஏ.க்கள் ஊதியத்தை 50 சதவீதம் உயர்த்தி இருந்தது. 2018-ம் ஆண்டு கேரளாவில் எம்எல்ஏக்கள் ஊதியம் 66 சதவீதம் உயர்த்தப்பட்டது. 2016-ம் ஆண்டில் தெலுங்கானாவின் அப்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு 163 சதவீதம் ஊதிய உயர்வை அறிவித்தது. 2016-ல் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையே 83 சதவீதம் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்திருந்தது.
தற்போது திருத்தப்பட்ட செயல்முறையின் கீழ், செலவு பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, செலவு பணவீக்க குறியீட்டின் படி, எம்.பி.க்களுக்கு மாதத்திற்கு ரூ.1.24 லட்சம் கிடைக்கும். இந்த நடைமுறைகள் வெளிப்படையானவை, தன்னிச்சையான முடிவுகளை விட பொருளாதார அளவீடுகளை அடிப்படையாக கொண்ட ஊதிய உயர்வாக இருக்கும்" இவ்வாறு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications