மிக பெரிய சதி? ஆரியன் கானுடன் போலீஸ் நிலையத்திலேயே செல்பி.. யார் அந்த மர்ம நபர்? திடீர் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உல்லாச கப்பலில் ரேவ் பார்ட்டி விவகாரத்தில் ஷாருக் கான் மகன் ஆரியன் கான் தடுப்பு காவலில் இருந்த போது, அவருடன் மொட்டைத் தலையுடன் இருக்கும் நபர் ஒருவர் எடுத்த செல்பி இப்போது வைரலாகியுள்ளது. போலீஸ் நிலையத்தில் இருந்த அந்த மர்ம நபர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மும்பையில் இருந்து உல்லாசக் கப்பலான 'எம்பிரஸ்' கடந்த அக்டோபர் 2ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளுடன் கிளம்பியது. இந்தக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் ரேவ் பார்ட்டி நடக்கப்போவதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கும் 15 நாட்களுக்கு முன் ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் எரி, அங்கு என்ன தான் நடக்கிறது என்பதைக் கண்காணித்துள்ளனர்.

 உல்லாச கப்பல்

உல்லாச கப்பல்

கப்பல் கரையை விட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தி பார்ட்டியை தொடங்கியுள்ளனர். அதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள், சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மேர்சன்ட் உள்பட 8 பேர் முதலில் தடுப்பு காவில் வைத்தனர்.

 ஆர்யன் கானுக்கு காவல்

ஆர்யன் கானுக்கு காவல்

இதையடுத்து ஆரியன் கானை கைது செய்த ஆர்யன் கான், அவரிடம் விசாரணை செய்து வருகிறது. இந்தச் சூழலில் ஆர்யன் கான் தடுப்பு காவலில் இருந்த போது, அவருடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போலீஸ் நிலையத்தில் எடுத்த செல்ஃபி ஒன்று வைரலாகியுள்ளது. மேலும், போலீஸ் நிலையத்தில் காவலர்களை தாண்டி ஒருவர் ஆர்யன் கானுடன் இருப்பது எப்படி என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 போலியான பிம்பம்

போலியான பிம்பம்

இது குறித்து நவாப் மாலிக் கூறுகையில், "தனியார் துப்பறிவாளர் கேபி கோசவி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்யான் கானின் கையைப் பிடித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், பாஜக முக்கிய தலைவர்களான மனிஷ் பானுஷாலியும் இந்த சமயத்தில் உடன் இருக்கிறார். மகாராஷ்டிராவில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாகப் போலியான ஒரு பிம்பத்தை உருவாக்கப் பொய்யான ரெய்டு தான் இது.

Recommended Video

    Who is Aryan Khan | Sha Rukh khan மகன் கைது
     தொடர்ந்து பொய்

    தொடர்ந்து பொய்

    எங்கள் குற்றச்சாட்டு என்னவென்றால், கடந்த ஒரு வருடமாகவே பாஜக தொடர்ந்து மகாராஷ்டிராவைக் குறை கூறி வருகிறது. அவர்கள் மணீஷ் பானுஷாலி மற்றும் கோசாவியின் மூலம் மிகப் பெரிதாக எதையோ செய்யத் திட்டமிட்டுள்ளனர். டெல்லி மற்றும் குஜராத்தில் மணீஷ் பானுஷாலி சந்தித்தது யார்? போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய ரெய்டில் அவர் எப்படி இருக்கிறார்? மகாராஷ்டிராவைக் கேவலப்படுத்த பாஜக என்சிபியைப் பயன்படுத்துகிறது"என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

     பாஜக மறுப்பு

    பாஜக மறுப்பு

    இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள மணீஷ் பானுஷாலி, "என்சிபி தலைவர் நவாப் மாலிக் என் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாஜகவுக்கும் இந்த ரெய்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அக்டோபர் 1ஆம் தேதி போதைப் பொருட்களுடன் கூடிய பார்ட்டி நடைபெறுவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இது குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளவே நான் என்சிபி அதிகாரிகளுடன் கப்பலில் இருந்தேன்" என்றார் போதைப்பொருள் தடுப்பு போலீசார் இருவரையும் சாட்சிகளாக என்று குறிப்பிட்டுள்ளனர்.

     யார் அவர்

    யார் அவர்

    தடுப்பு காவலில் எடுக்கப்பட்ட அந்த படம் தான், ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதை முதலில் உறுதி செய்தது. போலீசாரின் முறையான அனுமதி எதுவும் இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் பிரைவேட் இன்வேஸ்டிகேட்டார் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் முக்கியமான ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, 2 வெளியாட்களை எப்படி போலீஸ் நிலையத்தில் அனுமதிக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+