ராகுல் காந்தி இந்துக்களை சொல்லவில்லை.. பாஜக இத்தோட நிறுத்திக்கனும்! அண்ணனுக்கு ஆதரவாக வந்த பிரியங்கா
டெல்லி: மக்களவையில் நேற்று பேசிய எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்துக்களை இழிவாகப் பேசியதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்துக்கள் குறித்து ராகுல் காந்தி பேசவில்லை எனவும், அவர் பாஜகவினரை தான் பேசினார் என அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியாங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான் விவாதத்தை தொடங்கி வைத்து பாஜக எம்பி அனுராக் சிங் தாக்கூர் பேசினார்.

ஆனால் நீட் தேர்வு குறித்து பேச வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை கூறலாம் என சபாநாயகர் கூறியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமலியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக கூறுகிறார். அவர் நேரடியாகவே பரமாத்மாவுடன் பேசுவார். பரமாத்மாவும் நேரடியாகவே மோடியின் ஆன்மாவோடு பேசுவார். பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. அவர்கள் இந்து மதத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசியபோது, பாஜகவினர் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அமலியில் ஈடுபட்டனர்.

மேலும், ராகுலின் பேச்சு, இந்து சமூக மக்கள் மீதான தாக்குதல் என்றும், இந்துக்களை அவர் வன்முறையாளர்கள் போல சித்தரிக்க முயலுகிறார் என்று பிரதமர் மோடி குறுக்கிட்டுக் கூறினார். மேலும் இந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் காந்தி பேசியதாக அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ராகுல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக எம்பிகள் முழக்கமிட்டனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் என்று அழைத்ததாக பாஜக குற்றம்சாட்டிய நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது சகோதரரான ராகுல்காந்தி இந்துக்களை அவமதிக்கவில்லை எனவும் அதே நேரத்தில், பாஜக மற்றும் அதன் தலைவர்களைப் பற்றியே பேசினார் என விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் முதல் உரைக்குப் பிறகு, தனது தாயார் சோனியா காந்தியுடன் பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து பிரியங்கா காந்தி வெளியே வந்தார்.
அப்போது பேசிய அவர்,""அவரால் இந்துக்களை அவமதிக்க முடியாது. அவரது உரையில் அவர் மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். ராகுல் காந்தி பாஜகவைப் பற்றியும், பாஜக தலைவர்களைப் பற்றி மட்டுமே பேசினார்" என்றார்.
மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"பணவீக்கத்தை எண்ணி பெண்களும், கருப்புச் சட்டங்களை எண்ணி விவசாயிகளும், அக்னிவீரர் திட்டத்தை எண்ணி இளைஞர்களும், வினாத்தாள் கசிவை எண்ணி மாணவர்களும், தங்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையை எண்ணி சிறுபான்மை மக்களும் அச்சத்தில் உள்ளனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அச்ச உணர்வை எங்கும், எதிலும் பரப்புகிறது. மக்கள் மத்தியில் அச்சம், வன்முறை மற்றும் வெறுப்பினை பரப்பும் யாரும் அதன் ஊடாக பலன் அடைய முடியாது. பாஜக இந்த பாணி அரசியலை இப்போது நிறுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications