Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்து-னு சொல்லமாட்டேன்.. லோக்சபாவில் மத்திய அரசை சாடிய பிரியங்கா காந்தி! சீறிய பாஜகவினர் -பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛ஆபரேஷன் சிந்தூர்' குறித்து லோக்சபாவில் நடந்த விவாதத்தில் இந்து என்று சொல்லும்படி பாஜகவினர் கூறிய நிலையில் பிரியங்கா காந்தி மறுத்தார். மேலும் வரலாற்றில் முதல் முறையாக நம் நாட்டின் போரை நம் அரசோ, ராணுவமோ நிறுத்தவில்லை. அமெரிக்க அதிபர் தான் நிறுத்தி உள்ளார். பிரதமர் பதவி என்பது வெறும் பெருமையை பெறுவது மட்டுமல்ல..பொறுப்பையும் ஏற்க வேண்டும்'' என்று கடுமையாக சாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றிய விவரம் வருமாறு:

நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று ‛ஆபரேஷன் சிந்தூர்' குறித்த விவாதம் நடந்து வருகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் காங்கிரஸை கடுமையாக சாடினார்.

priyanka-gandhi-mentions-inidias-refuses-to-hindu-who-is-victim-of-pahalgam-attack-in-lok-sabha-and

பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் எங்கு சென்றனர் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதற்கு எனது பதில் என்னவென்றால் உங்களின் ஆட்சியில் தலைமறைவானவர்கள் இன்று தேடி தேடி கொல்லப்படுகின்றனர். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் ‛ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையில் அழிக்கப்பட்டுள்ளனர்.

2008 ம் ஆண்டில் நடந்த பட்லா ஹவுஸ் தாக்குதல் பற்றி காங்கிரஸின் சல்மான் குர்ஷித் (காங்கிரஸ் மூத்த தலைவர்) பேசினார். பட்லா ஹவுஸ் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்காக சோனியா காந்தி அழுததாக கூறினார். பயங்கரவாதிகளுக்காக அழுதவர் தான் சோனியா காந்தி என்று காட்டமாக கூறினார்.

இந்நிலையில் தான் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். அமித்ஷாவின் பேச்சை தொடர்ந்து லோக்சபாவில் பிரியங்கா காந்தி பேசியதாவது: மத்திய அரசை நம்பி பஹல்காமுக்கு மக்கள் சென்றனர். ஆனால் அரசு மக்களை கடவுளிடம் விட்டுவிட்டது. பஹல்காமுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளது அரசுக்கு தெரியாதா? ஏன் அங்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை? ஏன் அவர்கள் கடவுளின் கருணையில் விடப்பட்டனர்? பொதுமக்களின் பாதுகாப்புக்கு பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பு இல்லையா?

இவ்வளவு கொடூரமான தாக்குதல் நடக்கப்போகிறது என்றும்? பாகிஸ்தானிடம் பெரிய சதித்திட்டம் இருக்கிறது? என்பது பற்றியும் உளவுத்துறை அறியவில்லையா? இது மத்திய அரசின் மிகப்பெரிய தோல்வி. உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? யாராவது பதவியை ராஜினாமா செய்தார்களா?. ஆளும் கட்சி பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுகிறது. ஆனால் பஹல்காம் தாக்குதல் எப்படி நடந்தது? என்பது பற்றி இன்னும் எதையும் கூறவில்லை.

மன்மோகன் சிங் அரசில் 26/11 தாக்குதல் (மும்பை தாக்குதல்) நடந்தது. அப்போது அனைத்து பயங்கரவாதிகளும் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர்.ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். அவரும் தூக்கிலிடப்பட்டார். மகாராஷ்டிரா முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார். உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்தார். பொதுமக்கள் மற்றும் சொந்த நிலத்துக்கு பாதுகாப்பு வழங்காதததற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர்.

ஆனால் இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை. நம் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஒன்று நடந்தது. போரை நம் அரசோ, நம் ராணுவமோ நிறுத்தவில்லை. அமெரிக்க அதிபர் தான் நிறுத்தி உள்ளார். இது நமது பிரதமரின் பொறுப்பற்ற தன்மையை பிரதிபலிக்கிறது. தலைமைத்துவம் என்பது வெறும் பெருமையை பெறுவது மட்டுமல்ல, பொறுப்பையும் ஏற்க வேண்டும்'' என சாடினார்.

இந்த வேளையில் பிரியங்கா காந்தி, ‛‛பஹல்காம் தாக்குதலில் இறந்த 26 பேரில் 25 பேர் இந்தியர்கள்' என்று கூறினார். அதற்கு பாஜக எம்பிக்கள் ‛இந்துக்கள்' என்று கூறினர். அதற்கு பிரியங்கா காந்தி,‛இந்தியர்கள்' என்று சொன்னார். இதன்மூலம் இறந்தவர்களை மத அடிப்படையில் இந்துக்கள் என்று சொல்ல மறுத்து இந்தியர்கள் என்பதை உரக்க சொன்னார். இதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோஷமிட்டனர். இதனால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+