Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலஸ்தீன முஸ்லீம்களுக்காக மட்டுமல்ல.. வங்கதேச இந்துக்களுக்கும் ஆதரவு தெரிவித்த பிரியங்கா காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி இப்போது நாடாளுமன்றத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹேண்ட் பேக்கை எடுத்து வருகிறார். நேற்றைய தினம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் ஹேண்ட் பேக்கை எடுத்து வந்திருந்த நிலையில், இன்றைய தினம் அவர் வங்கதேச விவகாரம் தொடர்பான ஹேண்ட் பேக்கை எடுத்து வந்திருக்கிறார். வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் ஹேண்ட் பேக்கை அணிந்திருந்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி. இவர் கடந்த பல ஆண்டுகளாகவே அரசியலில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டதே இல்லை.

priyanka gandhi parliament

பிரியங்கா காந்தி: கடந்த 2024 லோக்சபா தேர்தலில் கூட அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவர் களமிறங்கவில்லை. அதேநேரம் வயநாடு மற்றும் ரேபரேலி என இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வென்ற நிலையில், அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் தான் பிரியங்கா காந்தி ஒருவழியாகப் போட்டியிட்டார்.

அதில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்ற நிலையில், சமீபத்தில் தான் எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் அவரது செயல்பாடுகள் தொடர்ந்து பெரும் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. குறிப்பாக அவர் எடுத்து வரும் ஹேண்ட் பேக்குகள் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கிறது.

ஹேண்ட் பேக்: கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அப்போது அதானி- மோடி ஆகியோர் உருவம் பதித்த ஹேண்ட் பேக்கை எடுத்து வந்துள்ளார். அது பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. அது தொடர்பான போட்டோ, வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டானது.

இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஹேண்ட் பேக்கை அணிந்திருந்தார். அதில் பாலஸ்தீன கொடூரம், இஸ்ரேல் போர் ஆகியவற்றை விவரிக்கும் காட்சிகள் இருந்தன. இதற்கிடையே இன்றைய தினம் அவர் வங்கதேச வன்முறை தொடர்பான படங்களுடன் கூடிய ஹேண்ட் பேக்கை அணிந்து வந்திருந்தார்.

வங்கதேச ஆதரவு ஹேண்ட் பேக்: அதில் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்போம் என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அங்குள்ள இந்து மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடந்து வருகிறது. அதைக் கண்டிக்கும் வகையிலேயே பிரியங்கா காந்தி இந்த ஹேண்ட் பேக்கை எடுத்து வந்துள்ளார். இது தொடர்பான போட்டோவை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில், அது டிரெண்டாகி வருகிறது.

முன்னதாக பிரியங்கா காந்தி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு பேக்கை எடுத்து வந்ததற்கு பாஜகவினர் மிகக் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக பாஜகவினர், "பிரியங்கா காந்திதான் தங்கள் கட்சி நீண்ட காலம் எதிர்பார்த்துக் காத்திருந்த தீர்வு என்று காங். தொண்டர்கள் கருதினர். ஆனால், இப்போது அதை நினைத்து அவர்கள் வெட்கப்படுவார்கள்.

நாடாளுமன்றத்திற்கு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் பையை எடுத்து வருகிறார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ராகுல் காந்தியை விடப் பிரியங்கா காந்தி அக்கட்சிக்கு மிகப் பெரிய ஒரு பேரழிவு. காங்கிரஸ் தான் புதிய முஸ்லீம் லீக் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+