“புரொபசர்”.. அமண்டா.. ‘மணி ஹெய்ஸ்ட்’ கேரக்டராகவே வாழ்ந்து ரூ.150 கோடி கொள்ளை அடித்த கும்பல் கைது!
டெல்லி: உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற பிரபல வெப் சீரிஸான 'மணி ஹெய்ஸ்ட்' தொடரால் ஈர்க்கப்பட்டு, அதில் வருவதுபோல பெயர்களை வைத்துக்கொண்டு செயல்பட்டு ரூ.150 கோடி கொள்ளை அடித்த கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் 'மணி ஹெய்ஸ்ட்'. இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த இத்தொடருக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வங்கிக் கொள்ளை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த வெப் சீரிஸ் தயாரிக்கப்பட்டது. பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மணி ஹெய்ஸ்ட் தொடரால் ஈர்க்கப்பட்டு, அதில் வரும் கேரக்டர்களை தங்களுக்கு வைத்துக்கொண்டு செயல்பட்டு ரூ.150 கோடியை சுருட்டிய கும்பல் ஒன்றை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அர்ப்ரீத், பிரபாத் மற்றும் அப்பாஸ் ஆகிய கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதில், வழக்கறிஞரான அர்ப்ரீத் என்பவர் 'மணி ஹெய்ஸ்ட்' சீரிஸில் வரும் புரொபசர் போன்று செயல்பட்டுள்ளார். மணி ஹெய்ஸ்ட் தொடரில் வரும் அமான்டா என்ற கேரக்டர் பெயரில் கம்பியூட்டர் சயின்ஸ் பட்டதாரியான பிரபாத்தும், ' ஃபிரெடி' என்ற பெயரில் அப்பாஸும் நடித்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கும்பல் முதலில் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் பெற்றுத் தருவதாக கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். தங்களின் மூலமாக முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி சிறிய அளவு பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு முதலில் கூடுதலாக பணத்தை கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் அதிகளவு முதலீடு செய்த உடன் அந்தக் கணக்கை முடக்கி உள்ளனர். இதனை மீறி பணத்தை எடுக்க முயலும் போது அவர்களை மிரட்டி கூடுதல் பணத்தை டெபாசிட் செய்ய வைத்துள்ளனர். இவ்வாறு, அந்த கும்பல் 300 பேரை ஏமாற்றி மோசடி செய்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதில் கிடைத்த பணத்தை செலவழிக்க ஆடம்பர ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இது தொடர்பாக உத்தர பிரதேசத்தின் நொய்டா மற்றும் மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரங்களில் பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், அவர்கள் பயன்படுத்திய 11 மொபைல் போன்கள், 17 சிம்கார்டுகள், 12 வங்கி பாஸ் புத்தகங்கள், செக் புத்தகங்கள், 32 டெபிட் கார்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சைபர் மோசடியில் சீன மோசடிக்காரர்களின் நெட்வொர்க்கும் பங்கு வகித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரையும், அவர்களின் வெளிநாட்டு நெட்வொர்க்கையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "இந்த கும்பல் பலரிடம் மோசடி செய்து ரூ.150 கோடி வரை கொள்ளையடித்துள்ளனர். இந்த மோசடியில் சீன நாட்டவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இதனை தவிர்த்து வேறு முறைகளில் மோசடி செய்து இந்த கும்பல் ரூ.23 கோடி ரூபாய் பணம் பறித்துள்ளனர். வெளிநாட்டினர் தொடர்பு குறித்தும், அவர்களின் கூட்டாளிகள் குறித்தும் விசாரணை நடக்கிறது." எனத் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications