மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை.. ஜிஎஸ்டியிலிருந்து தடுப்பூசிக்கு விலக்கு வேண்டும்.. பிடிஆர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தடுப்பூசிகள், ரெம்டெசிவர் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 43-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி(ஜி.எஸ்.டி) கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

தமிழக நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் இதுவாகும். இதனை கூட்டத்தில் பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தெரிவித்தார்.

முக்கியமான கருத்துக்கள்

முக்கியமான கருத்துக்கள்

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய முக்கியமான கருத்துக்கள் பின்வருமாறு:- கொரோனா தடுப்பூசிகள், ரெம்டெசிவர் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா காரணமாக 2021-22-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும். மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை மத்திய அரசு நினைவில் கொள்வது சிறப்பாகும். மத்திய அரசுக்கு என்று தனியாக வாக்களார்கள் இல்லை. மனக்கசப்புடனும், வேண்டா வெறுப்புடனும் நன்கொடையாளராக மத்திய அரசு செயல்பட முடியாது. ஜிஎஸ்.டியை முழுமையாக மாற்றியமைப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். ஜிஎஸ்டியை மாற்றி அமைக்கவில்லை எனில் எதிர்காலத்தில் பெரும் இழப்பை சந்திக்க நாம் சந்திக்க வேண்டிய நேரிடும்.

இழப்பீடு நீட்டிக்க வேண்டும்

இழப்பீடு நீட்டிக்க வேண்டும்

இதனை கருத்தில் கொண்டு, 2021-2022-ல் பாதுகாக்கப்பட்ட வருவாய் மற்றும் உண்மையில் எதிர்பார்க்கப்படும் வருவாய் இடையேயான இடைவெளியை, மத்திய அரசின் நிதியிலிருந்தோ, அல்லது வெளிச் சந்தைக் கடன் ஏற்பாட்டின் மூலமாகவோ, மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடு செய்யுமாறு இம்மன்றத்தை கேட்டுக் கொள்கிறேன். மேலும், கோவிட்-19 ன் நீண்ட கால பாதிப்பினை கருத்தில் கொண்டு, இழப்பீடு ஏற்பாட்டை 01.07.2022-க்குப் பின்னும் நீட்டிப்பு செய்வது பொருத்தமாக இருக்கும்.

மாற்றுப்பணி முறை

மாற்றுப்பணி முறை

GSTN அமைப்போடு தொடர்புடைய அனைவரையும் அவ்வமைப்பில் இணைக்கும் முயற்சியாக மாநில வரி அலுவலர்களை மாற்றுப்பணி முறையில் பணிபுரிய வைக்கும் நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம் மாற்றுப்பணியில் பணிபுரிய பரிந்துரைக்கப்பட்ட தகுதி, மாநிலவரித்துறையில் பணிபுரியும் மூத்த அலுவலர்கள் தேர்வு ஆவதற்கு ஏற்றார்போல் இருப்பது அவசியமாகிறது. இதன் பொருட்டு விவாதிக்க இம்மன்றத்தினை கேட்டுக் கொள்கிறேன். தாமதமாக தாக்கல் செய்ப்படும் நமுனாக்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தாமதக் கட்டணத்தை குறைப்பது தொடர்பான சட்டக் குழுவின் பரிந்துரையை வரவேற்கிறோம்.

சட்ட திருத்தம் ஆதரிக்கிறோம்

சட்ட திருத்தம் ஆதரிக்கிறோம்

இருப்பினும், தற்போது நிலவும் பெருந்தொற்றை கணக்கில் கொண்டு இதனைச் செயல்படுத்தும் காலத்தை 31.08.2021-லிருந்து 30.09.2021 ஆக நீட்டிப்பு செய்யலாம். 2020-2021-ஆம் நிதியாண்டிற்கான வருடாந்திர நமுனாவை தணிக்கையாளர் அறிக்கையுடன் கூடிய படிவம் GSTR-9C யுடன் தாக்கல் செய்வதற்கு பதிலாக, வரி செலுத்துவோர் தங்களது சுய சான்றுடன் கூடிய இணக்க அறிக்கையுடன் தாக்கல் செய்ய வழி வகுக்கும் கருத்துருவினை நாங்கள் ஆதரிக்கிறோம், மேலும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட வேண்டிய நமுனாக்கள் குறித்த சட்டத் திருத்தங்களையும் ஆதரிக்கிறோம்.

மாதந்தோறும் வரிசெலுத்துதல்

மாதந்தோறும் வரிசெலுத்துதல்

தற்போது நடைமுறையில் உள்ள காலாண்டிற்கொருமுறை நமுனா தாக்கல் மாதந்தோறும் வரிசெலுத்துதல் முறையை காலாண்டிற்கொருமுறை நமுனா தாக்கல் மற்றும் காலாண்டிற்கொருமுறை வரி செலுத்துதல் மூலம் மாற்றியமைக்கும் திட்டத்திற்கும் கொள்கையளவில் ஆதரவளிக்கிறோம். இது குறித்த முழு விபரமும்
கிடைக்கப்பெற்றபின் இறுதிமுடிவு எடுக்கும் நிலையில் உள்ளோம். மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,
மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் தற்போதைய தலையாய பணி, கோவிட் பெருந்தொற்றினை எதிர்த்து நடவடிக்கை எடுப்பதேயாகும். பெருந்தொற்றினை எதிர்கொண்டு, கட்டுப்படுத்துவதன் பொருட்டு அவசியமானபல்வேறு மருத்துவ பொருட்களை கொள்முதல் செய்யப்பட்டு வருவதை தாங்களும் அறிவீர்கள்.

வரி விலக்கு வேண்டும்

வரி விலக்கு வேண்டும்

அவைகளில் (1) மாநில அரசு கொள்முதல் செய்கின்ற தடுப்பூசிகள் மற்றும் (2) ரெமிடெசிவிர் மற்றும் டொசிலிசுமப் அடங்கிய மருந்துகளை கொள்முதல் செய்வதே முக்கியமானவைகளாகும். இந்த சூழ்நிலையில் மாநில அரசு அல்லது அதன் முகவர்கள் மேற்கொள்ளும் கோவிட் பெருந்தொற்று தடுப்பூசிகள், ரெமிடிசிவிர்
மற்றும் டொசிலிசுமப் ஆகியவை மீது பூஜ்ய வரி விகிதத்தினை தற்காலிகமாகவாவது விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் இத்தகைய அவசியமான பொருட்களின் மீதான விலை குறைவது மட்டுமின்றி, இதனை விற்பனை செய்பவர்களுக்கு பாதிப்பில்லாமல் உள்ளீட்டு வரி வரவு கிடைக்க வழி

பூஜ்ய விகித வரி வேண்டும்

பூஜ்ய விகித வரி வேண்டும்

இது குறித்து மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எங்கள் முதல்வர் அவர்கள் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார் என்பதை நினைவு கூர்கிறேன். எனவே, அத்தியாவசியமான இந்த பொருட்களுக்கு பூஜ்ய விகித வரி விதிக்க முடிவு எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி குறிப்புகளில் பூஜ்ய வரி விகிதம் தொடர்பாக எழும் சட்ட சிக்கல்கள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்து உருவாகும் பட்சத்தில், இந்த சட்டச்சிக்கல்களை உரிய சட்ட வரைவுகள் மூலம் தீர்க்கலாம் என்று நான் நம்புகிறேன்.

நாங்கள் பரிசீலிப்போம்

நாங்கள் பரிசீலிப்போம்

வரி விகித பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை நாம் பரிசீலிப்போம். வரிவிகித பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளான எந்த ஒரு நபரும், மாநில மற்றும் மைய அரசு அல்லது இலாப நோக்கு இல்லா மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்படும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கான குறிப்பிட்ட பொருட்களின் மீதான தற்காலிக ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விலக்கு, மற்றும் மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டி / தயாரிப்பு கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் மற்றும் கோவிட் சோதனை கருவிகள் ஆகியவற்றுக்கான வரி விகிதம் குறைப்பினை நாங்கள் ஆதரிக்கிறோம்.

மாத்திரைகளுக்கு வரி விகித குறைப்பு

மாத்திரைகளுக்கு வரி விகித குறைப்பு

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனங்களால், உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய கிளைக்கு வழங்கப்பட்ட டை-எத்தில் கார்பமைசின் மாத்திரைகளுக்கு வரி விகித குறைப்பு, கப்பல் பழுது பார்ப்பிற்கு வரி 18 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைப்பு, மற்றும் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள தெளிவுரைகள் மற்றும் அங்கன் வாடிகளுக்கு விலக்கினை நீட்டித்தது உள்ளிட்ட வரி விகித பரிசீலனைச் குழுவின் பரிந்துரைகளை நாங்கள் ஏற்கிறோம்.

சிறந்த உதவி

சிறந்த உதவி

மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கான வரி விலக்கு கோரிய விண்ணப்பத்தின் மீதான வரி கொள்கைக்கு பதிலாக பொதுச் செலவினத்திலிருந்து மானியமாக வழங்குதல், குறிப்பாக பயனாளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு உருவாக்குவதையுமே மிகவும் பயனுள்ள கொள்கையாகவும் அவர்களுக்கு வழங்கும் சிறந்த உதவியாகவும் இருக்கும் என்ற பரிந்துரையினை நாங்கள் ஏற்கிறோம். மேலும்,
நாங்கள் வரி விகித பரிசீலனைக்குழுவின் இணக்க வரி திட்டத்திலிருந்து ஜஸ்கிரிமை எதிர்மறைப் பட்டியலில் தொடர்ந்து வைப்பதற்கான பரிந்துரையினையும் நாங்கள் ஏற்கிறோம்.

தள்ளி வைக்கலாம்

தள்ளி வைக்கலாம்

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே இந்த பெருந்தொற்றுக் காலத்தில் வரி விகித உயர்வு என்பது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் என்பதால், வரிவிகித பரிசீலனைக் குழுவின் ஜவுளி மற்றும் காலணிகள் மீதான தலைகீழ் வரிவிகித கட்டமைப்பின் திருத்தம் தொடர்பான பரிந்துரையினை அடுத்த கூட்டம் வரை தள்ளி வைக்கலாம் என்று கருதுகிறோம். எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால் மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பது குறித்து ஒருமித்த கருத்து எட்டாததால், இதனை தள்ளி வைக்கலாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+