Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சத்தில் "பப்ஜி" வெறி.. இரவு முழுக்க பெற்றோரை அடித்தே கொன்றே மகன்.. உறைய வைக்கும் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வீடியோ கேமிற்கு அடிமையான இளைஞர் ஒருவர் தனது பெற்றோரையே கொடூரமாக அடித்து கொலை செய்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

இந்த நவீன உலகில் வெளியே சென்று விளையாடுவது என்பது வெகுவாக குறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக வீடியோ கேம்களிலேயே இங்கே பலரும் மூழ்கிப் போயுள்ளனர். அதிலும் 24 மணி நேரமும் வீடியோ கேமில் மூழ்கிப் போனவர்கள் எல்லாம் இங்கே இருக்கவே செய்கிறார்கள்.

 PUBG addicted man turned into mentally ill and killed his parents

வீடியோ கேமிற்கு அடிமையானால் பல மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்தே வருகிறார்கள். இதனால் எந்தளவுக்கு மோசமான சம்பவங்கள் நடக்கும் என்பதைக் காட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வீடியோ கேம்: இதற்கிடையே அப்படி விளையாட்டிற்கு அடிமையான ஒருவர் தனது பெற்றோரையே கொடூரமாகத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த பங்காரமான சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்துள்ளது. பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான அந்த நபர் விடிய விடிய தனது பெற்றோரை அடித்தே கொடூரமாகக் கொலை செய்துள்ளான்.

அதிகாலை நேரத்தில் பால் வியாபாரி வீட்டில் வந்து பார்த்த போது தான் இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொடர்ச்சியாக பப்ஜி கேமை விளையாடிக் கொண்டே இருந்ததால் அவரது மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவர் தன்னையே அறியாமல் இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வயதான தம்பதி: அங்குள்ள ஜான்சியின் நவாபாத் பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமி பிரசாத்.. ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான இவருக்கு விமலா (55) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிக்கு அங்கித் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று சனிக்கிழமை காலை வழக்கம்போல் அந்த பால்காரர் கதவைத் தட்டியுள்ளார். இருப்பினும், அங்கிருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லையாம்.

இதனால் சந்தேகமடைந்த பால்காரர் உள்ளே சென்று பார்த்துள்ளார். வீட்டில் அவர் பார்த்த காட்சிகள் அவரது நெஞ்சை உறைய வைப்பதாக இருந்துள்ளது. உள்ளே ​லட்சுமி பிரசாத் மற்றும் விமலா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

பப்ஜிக்கு அடிமை: அங்கித் கடந்த 2018 வரை நார்மலாகவே இருந்துள்ளார். போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது தான் அவர் முதலில் பப்ஜி விளையாடத் தொடங்கியுள்ளார். தொடர்ச்சியாக பப்ஜி கேமை விளையாடி வந்துள்ளார். இரவு பகல் பார்க்காமல் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படி பப்ஜி கேமிற்கு அவர் ஓவராக அடிமையானது மன ரீதியாக மிகக் கடுமையாக அவரை பாதித்ததாகக் கூறப்படுகிறது. பப்ஜி கேமில் அவரது வெற்றி தோல்வி அவரது வாழ்க்கையிலும் மனநலனிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. அதன் விளைவாகவே இந்த படுகொலை நடந்துள்ளது.

போலீசார்: இது குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடலையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே லட்சுமி பிரசாத் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி விமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொஞ்ச நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கித்தை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது பெற்றோரைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பப்ஜி கேமிற்கு அடிமையானதால் ஏற்பட்ட மனநல பாதிப்பால் இந்த கொடூர சம்பவம் நடந்ததாக போலீசார் கூறுகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அடுத்த கட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+