தமிழகத்தில் ஏப்ரல் 19ல் மக்களவைத் தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை! தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளன்று அனைவரும் சென்று வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்குச் சதவீதம் என்பது 100 சதவீதத்தை எட்டுவதில்லை. இது ஜனநாயக உரிமைக்கு எதிராக உள்ளது.

Public holiday with one salary on Tamilnadu Lok sabha election 2024 EC announces

அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டிய நிலையில் 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை வாக்களிக்காமல் இருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டே தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மருத்துவமனை, காவல் நிலையம், தீயணைப்பு துறை, பத்திரிகை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளை தவிர்த்து மற்றவர்களுக்கு பொது விடுமுறை விடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த மக்களவைத் தேர்தலுக்கும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்குமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கடிதம் அளித்துள்ளார்.

இதன்படி தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் , விளவங்கோடு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+