செங்கோட்டை கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சிங் சித்து விபத்தில் பலி: ஷாக்கில் பஞ்சாப்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : டெல்லி செங்கோட்டை அருகே விவசாயிகள் நடத்திய பேரணியில் வெடித்த கலவரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தலைநகரான டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதக்கணக்கில் கடும் பனி, வெயிலை பொருட்படுத்தாது போராடிய விவசாயிகள் குறித்த செய்தி உலகமெங்கும் பேசுபொருளாக மாறியது. இந்தியாவிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும், பிரபலங்களும் குரல் கொடுத்தனர்

 நடிகர் தீப் சிங் சித்து

நடிகர் தீப் சிங் சித்து


இந்த நிலையில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது திடீரென கலவரம் வெடித்தது. அப்போது டெல்லி செங்கோட்டையில் அத்துமீறி கொடி ஒன்றும் ஏற்றப்பட்டது. அப்போது பஞ்சாபி நடிகரான தீப் சிங் சித்து என்பவர்தான் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருசில விவசாயிகள் தூண்டி ஊர்வலத்தில் கலவரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலம் முக்த்சரில் பிறந்தவரான சித்து மாடலிங் உலகில் ஒரு மாடலாக அறிமுகம் ஆனார் பின்பு கடந்த 2015ஆம் ஆண்டில் நடிகராக அறிமுகமானார்.

 பிரபல நடிகர்

பிரபல நடிகர்

சட்டக் கல்லூரி மாணவரான அவர் படிப்பை முடித்துவிட்டு பிறகு நடிப்பு துறையை தேர்ந்தெடுத்தார். பஞ்சாப் திரையுலகில் மிகப் பிரபலமான சித்து ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். பாஜக எம்பியும் நடிகருமான சன்னி தியோலுக்கு நெருங்கிய நண்பராக விளங்கிய சித்து கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது சன்னிதியோலுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே தீவிர களப்பணி ஆற்றி வந்த சித்து, ஒரு பகுதி விவசாயிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததாகவும் அவருக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

அப்போதுதான் விவசாயிகளை செங்கோட்டைக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றதாகவும், கலவரத்தின் போது அதன் உச்சியில் அத்துமீறி கொடியையும் ஏற்றியுள்ளார். இதை சித்துவே தனது முகநூல் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஜாமினில் வெளிவந்த நிலையில் இன்று 9 மணியளவில் சித்து கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 விபத்தில் பலி

விபத்தில் பலி

டெல்லியின் குண்ட்லி - மனேசர் - பல்வால் பகுதிகளை இணைக்கும் கேஎம்பி எக்ஸ்பிரஸ் சாலையில் செல்லும்போது இரவு ஒன்பது முப்பது மணி அளவில் சித்து பயணித்த கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியில் இருந்து பஞ்சாபில் உள்ள பதிவுக்கு அவர் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது சரக்கு வாகனம் ஒன்றில் கார் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் சித்து உயிரிழந்த நிலையில், அவருடன் பயணித்த ஒரு பெண் ஒருவரும் காயம் அடைந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+