பஞ்சாப் பிரசாரத்தில் களமிறங்கும் கெஜ்ரிவால் மனைவி, மகள்... அனல் பறக்க ரெடியாகும் ஆம் ஆத்மி
டெல்லி: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி மற்றும் மகள் பிரசாரம் செய்யவுள்ளனர்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்துக் கட்சிகளும் துரிதமாக செயல்பட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிப் போட்டியிடுகிறது. பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சிக்கு வரவேற்பு இருக்கிறது.

ஆம் ஆத்மி
பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மாற்றம் கொண்டு வரவே ஆம் ஆத்மி போட்டியிடுவதாக அறிவித்தது. பஞ்சாப் முதல்வரை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என கூறப்பட்டு, அதற்காக மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. 21 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று பகவந்த் மான் தேரானார்.

பகவந்த் மான்
சங்ரூர் மக்களைவை உறுப்பினராக இருக்கும் பகவந்த் மான், பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவராக உள்ளார். தற்போது முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மான், தூரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு பஞ்சாப் மக்களிடையே நல்ல அறிமுகம் இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாப் தேர்தல் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ''பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பது தெளிவாகிறது. முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர்தான் பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வராக வருவார். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆளும் காங்கிரஸுக்கு சவாலாக மாறியுள்ளது. 117 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாபில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மான் தலைமையிலான ஆம் ஆத்மி 20 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது'' என்றார்.

கெஜ்ரிவால் மனைவி
அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா மற்றும் மகள் ஹர்ஷிதா அடுத்த வாரம் நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரசாரம் செய்யவுள்ளனர். இதுகுறித்து கெஜ்ரிவாவின் மனைவி சுனிதா ட்விட்டரில், "நாளை எனது மைத்துனர் பகவந்த் மானிக்கு வாக்கு கேட்க எனது மகளுடன் தூரிக்கு செல்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications