பாஜகவுக்கு போன ஹர்பஜன் சிங்! போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.. பழிவாங்கும் பஞ்சாப் அரசு!
டெல்லி: பாஜகவில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி ஹர்பஜன் சிங்கிற்கு வழங்கப்பட்டிருந்த மாநிலக் காவல் துறையின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஹர்பஜன் சிங்கிற்கு பஞ்சாப் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டிருந்த 9 முதல் 10 காவலர்களைக் கொண்ட பாதுகாப்புப் படை திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. ஜலந்தரில் உள்ள அவரது இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த மாநிலக் காவல்துறையினர் விலக்கிக் கொள்ளப்பட்டனர். ஜலந்தரில் உள்ள அவரது இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த மாநிலக் காவல்துறையினர் விலக்கிக் கொள்ளப்பட்டனர்.

மாநிலக் காவல் துறை விலகிய அடுத்த நாளே அதாவது இன்று, ஹர்பஜன் சிங்கின் இல்லத்தில் மத்தியப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது கவனிக்கத்தக்கது. பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
கிரிக்கெட் பிளேயராக இருந்த ஹர்பஜன்சிங்கை அழைத்து வந்து எம்பி ஆக்கி அழகு பார்த்தது ஆம் ஆத்மி. ஆனால், ஹர்பஜன் சிங் உட்பட 7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவுக்கு தாவினர். இவர்களை துரோகிகள் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடுமையாகச் சாடியுள்ளார்.
பாஜக, ஆம் ஆத்மியை உடைக்க முயல்வதாகவும், இது பஞ்சாப் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தனது கொள்கைகள் மற்றும் விழுமியங்களிலிருந்து விலகிவிட்டதே தாங்கள் வெளியேறுவதற்குக் காரணம் என்று கட்சியிலிருந்து விலகிய ராகவ் சதா விளக்கம் அளித்துள்ளார்.
- ராகவ் சதா
- சந்தீப் பகத்
- ஸ்வாதி மாலிவால்
- ஹர்பஜன் சிங்
- ராஜேந்தர் குப்தா
- அசோக் மிட்டல்
- விக்ரம் சாஹ்னி
ஆகியோர் பாஜகவுக்கு தாவியிருக்கின்றனர். இவர்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. அதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின் படி, ஒரு கட்சியின் 3-ல் 2 பங்கு (2/3rd) உறுப்பினர்கள் பிரிந்து சென்று மற்றொரு கட்சியுடன் இணைந்தால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. அவர்களின் எம்பி பதவியும் பறிபோகாது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications