பஞ்சாப் ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல்: கடைசி இடத்திற்கு தள்ளப்படும் பாஜக.. தூள் கிளப்பும் ஆம் ஆத்மி!
டெல்லி: பஞ்சாப்பில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியே தனிபெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என ரிபப்ளிக் டிவி பி மார்க் எக்ஸிட் போல் முடிவுகள் கணித்துள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் என நான்கு முனை போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே சில மாதங்களே முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளராகவும் ஆம் ஆத்மி சார்பில் பகவந்த் மானும் அறிவிக்கப்பட்டனர்.

கடும் போட்டி
இந்த நிலையில் இவர்களுக்கிடையே போட்டி கடுமையாக இருந்த நிலையில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது குறித்து பல செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளன. அதில் பஞ்சாபில் ரிபப்ளிக் டிவி பி மார்த் எக்ஸிட் போல் நடத்திய கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எத்தனை இடங்கள்
நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி 62-70 இடங்களிலும் காங்கிரஸ் 23-31 இடங்களிலும், அகாலி தளம் 16-24 இடங்களிலும் பாஜக கூட்டணி 1-3 இடங்களிலும் இதர கட்சிகள் 1 முதல் 3 இடங்கள் வரை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் பஞ்சாபை தவிர 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியே இருந்தது. இதனால் பஞ்சாபில் இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வந்தது.

காங்கிரஸ் ஆட்சி
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி வென்றது. அங்கு பாஜக - சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்து காங்கிரஸ் சார்பாக அமரீந்தர் சிங் முதல்வராக தேர்வானார். அந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்று அபார வெற்றிபெற்றது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களை வென்றது. பாஜக - சிரோன்மணி அகாலிதளம் 18 இடங்களை வென்றது. லோக் இன்சாப் கட்சி 2 இடங்களை வென்றது. அமரீந்தர் சிங் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சன்னி நியமிக்கப்பட்டார். கடந்த தேர்தலில் 3 ஆவது இடத்திற்கு வந்த ஆம் ஆத்மி இந்த முறை கருத்து கணிப்பில் ஆட்சியை பிடிக்கும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications