குடைச்சல் கொடுக்கும் அமெரிக்கா! திடீரென புதினுக்கு போன் அடித்த பிரதமர்.. இந்தியாவுக்கு வர அழைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல் மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பஞ்சாயத்துகளுக்கு இடையில் இன்று ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். இந்த கலந்துரையாடலில், புதின் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா நம்மீது 50% வரியை போட்டிருக்கிறது. இந்த சலசலப்புக்கு இடையில் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றிருந்தார். அங்கு ரஷ்ய அதிபர் புடினை நேரில் சந்தித்து பேசியிருந்தார்.

Putin Modi Russia

இதனைதொடர்ந்து, புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார். இந்த உரையாடலில் உக்ரைன் போர் குறித்து இரு தலைவர்களும் பேசியிருக்கின்றனர். அதேபோல இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் 23வது வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருமாறு புடினை மோடி அழைத்திருக்கிறார்.

இந்த உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மோடி, "எனது நண்பரும் அதிபருமான புதினுடன் மிகவும் சிறப்பான, விரிவான உரையாடலை நடத்தினேன். உக்ரைன் தொடர்பான அண்மைக்கால முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். எங்கள் இருதரப்பிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பேசினோம். இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வரவிருக்கும் அதிபர் புதினை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், பிரேசில் அதிபருடனும், அதை தொடர்ந்து ரஷ்ய அதிபருடனும் மோடி பேசியிருக்கிறார். மட்டுமல்லாது இம்மாத இறுதியில் மோடி சீனாவுக்கும் செல்கிறார். இது சர்வதேச அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+