கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள்.. புதின் சொன்ன முக்கிய மேட்டர்! கிளம்பும் விவாதம்
டெல்லி: இரண்டு நாட்கள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருக்கிறார். இந்நிலையில், இன்று பிரதமர் மோடியுடன் செய்தியாளர்களை சந்தித்த புதின், இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகத்தை தொடர நாங்கள் தயார் என்றும், இந்தியாவின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் கட்டப்பட்டு வருகிறது. இதனை விரைந்து கட்டி முடிப்போம் என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கினால் கூடுதல் வரியை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க எச்சரித்திருந்த நிலையில், எரிபொருள் கொள்முதலை குறைக்க இந்தியா யோசித்து வருகிறது. இந்நிலையில், எரிபொருள் விநியோகத்தை தொடர நாங்கள் தயார் என்று புதின் கூறியுள்ளார். மட்டுமல்லாது 2023 வரை இந்தியா-ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், "ரஷ்யா அல்லது பெலாரசிலிருந்து, இந்திய பெருங்கடல் வரை, வடக்கு-தெற்கே போக்குவரத்தை உருவாக்கும் திட்டத்தில், புதிய சர்வதேச போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்க நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். மிகப்பெரிய இந்திய அணுமின் நிலையத்தில் கட்டும் திட்டத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆறு உலைகளில் மூன்று ஏற்கனவே எரிசக்தி வளையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல சென்னையில் இருந்து விளாடிவோஸ்டாக் கடல் வழி திட்டத்தால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு எங்கள் இருப்பு வர்த்தக வருவாய் 12 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது இருநாட்டு வர்த்தகத்தில் மற்றொரு சாதனையாகும். இந்த ஆண்டு முடிவிலும் இருதரப்பு வர்த்தக வருவாய் இதைவிட அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர் அளவுக்கு கொண்டு செல்லும் பணியை நாங்கள் தீவிர படுத்திருக்கிறோம்.
எதிர்வரும் காலங்களில் எங்கள் நட்பு, சர்வதேச சவால்களை எதிர்கொள்ள எங்களுக்கு பலத்தை கொடுக்கும். இந்த நம்பிக்கை எங்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications