கத்தாரில் கதறும் இந்தியர்கள்.. 8 பேருக்கு மரண தண்டனை.! இந்தியாவின் மேல்முறையீடு ஏற்பு! அடுத்து என்ன
டெல்லி: கத்தாரில் எட்டு முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இந்திய அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் இருக்கும் முக்கியமான நாடுகளில் ஒன்று கத்தார். மிகுந்த எண்ணெய் வளம் கொண்ட கத்தாருக்கும் இந்தியாவுக்கும் நல்ல வர்த்தக உறவு இருக்கிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு கத்தாரை அதிகம் சார்ந்து இருக்கிறது.

இதற்கிடையே கத்தாரில் இயங்கி வந்த கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த எட்டு முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கத்தார் அரசு: கத்தார் நாட்டில் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 இந்தியர்கள் உளவு பார்த்ததாகப் புகார் எழுந்தது. கடந்தாண்டு இந்த குற்றச்சாட்டில் எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்தியக் கடற்படையின் முன்னாள் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் கத்தாரில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியத் தகவல்களை இஸ்ரேலுக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த 8 பேரும் கைதான நிலையில், இது தொடர்பான வழக்கு கத்தார் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கிடையே கடந்த மாதம் இறுதியில் 8 பேருக்கும் மரண தண்டனை வழங்கி கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேல்முறையீடு: அப்போதே இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அந்த 8 பேரையும் இந்தியாவுக்கு அழைத்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
இதற்கிடையே கத்தாரில் 8 இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு ஏற்கப்பட்டது. இந்திய அரசு மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்து வருவதாகவும் அது விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கத்தார் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு: இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை சார்பில் கூறுகையில், "இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் ரகசியமானது. அதைப் பொதுவெளியில் வெளியிட முடியாது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டப்பூர்வமான ஆலோசனை பெறப்பட்டது. அனைத்து ஆப்ஷன்களையும் ஆராய்ந்த பிறகு மேல்முறையீடு செய்தோம். இந்த விவகாரத்தில் கத்தார் அதிகாரிகளுடன் தொடர்பில் தான் இருக்கிறோம்" என்றார்.
அங்கே சிறையில் இருக்கும் இந்த 8 இந்தியர்களுக்கும் தேவையான அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் அரசு அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
யார் அவர்கள்: கத்தாரில் இப்போது மரண தண்டனையைப் பெற்றுள்ள இவர்கள் 8 பேரும் இந்தியக் கடற்படையில் பணியாற்றிய வீரர்கள் ஆவர். கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சௌரப் வசிஷ்ட், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் சைலர் ரேகேஷ் கோபாகுமார் ஆகியோருக்கு தான் கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களைக் காக்கவே இந்திய அரசு இப்போது மேல்முறையீடு செய்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications