ரபேல் ஆவணங்கள் ராணுவ ரகசியம்.. அதை விசாரிக்க கூடாது.. மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்!
டெல்லி: ரபேல் ஒப்பந்த ஊழல் வழக்கில் தற்போது மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முக்கிய பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தி இந்து பத்திரிக்கை வெளியிட்ட ஆதாரங்களை எடுத்துக்கொள்வது குறித்து நாளை விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆதாரங்கள் இந்த வழக்கின் திசையை மொத்தமாக மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாணப்பத்திரம் தாக்கல்
இந்த ரபேல் வழக்கில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தது. தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். அதன்படி தற்போது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

என்ன சொல்கிறது
மத்திய பாதுகாப்புத்துறை தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், ரபேல் வழக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பானது. ரபேல் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் ஆதாரங்களில் விமானங்களை பற்றிய தகவல்கள் இருக்கிறது. இது போர் விமானங்கள் குறித்து. அதனால் அதை ஆதாரமாக எடுக்க கூடாது.

திருட்டுதான்
இந்த ஆதாரங்கள் திருடப்பட்டு இருக்கிறது. இது அரசு ஆவணங்களை, ரகசிய போர் ஆதாரங்களை வெளியிட்டதற்கு சமம். ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இந்த ஆதாரங்கள் எதிரானது. அதனால் இதை கருத்தில் கொள்ள கூடாது என்று மத்திய அரசு பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

நாளை விசாரணை
ரபேல் வழக்கில் நாளை விசாரணை நடக்க இருக்கிறது. சென்ற விசாரணையின் போது மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிறைய வாதங்களை வைத்தனர். தற்போது அதை குறித்தும், ரபேல் ஆதாரங்கள் குறித்தும் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications