என்ன நடக்கிறது.. ரபேலில் காங். மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெறும் அனில் அம்பானி.. பாஜக அதிர்ச்சி!
ரபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற்று இருக்கிறார்.
டெல்லி: ரபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற்று இருக்கிறார்.
ரபேல் ஊழல் தொடர்பான விசாரணையில் அனைத்து கட்ட விசாரணைகளும் முடிவடைந்துள்ளது. இந்த வழக்கு மீதான டிசம்பர் மாத தீர்ப்பு மத்திய அரசுக்கு ஆதரவாக வந்தது. இதற்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை கடந்த 4 மாதங்களாக நடந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது. ரபேல் வழக்கு நடந்த போது ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

பார்ட்னர்
இந்த ரபேல் ஒப்பந்தத்தில் ஆப்செட் பார்ட்னராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக ராகுல் குற்றஞ்சாட்டி இருந்தார். அதன்படி, அனில் அம்பானிக்கு மோடி 30,000 கோடி ரூபாயை கொடுத்துவிட்டார்.

வழக்கு தொடுத்தார்
இதில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருக்கிறது என்று ராகுல் குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு எதிராக அனில் அம்பானி சென்ற மாதம்தான் முதல்முறை பேசினார். ராகுலின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று அனில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு எதிரான அனில் அம்பானி சார்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது.

காங்கிரஸ் அவமதிப்பு
காங்கிரஸ் மீது அவமதிப்பு வழக்கு தொடுத்து 5000 கோடி ரூபாய் கேட்டு இருந்தார். பாஜக கட்சியும் இந்த வழக்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக ரபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற இருக்கிறார். நீதிமன்ற விடுமுறை முடிந்த பின் வழக்கு வாபஸ் பெறப்படும். இதற்கான கடிதம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்
இது பாஜக கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அனில் அம்பானி இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. தேசிய அரசியலில் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது பெரிய விவாதத்தை எழுப்பி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications