டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரபேலில் அரசு உண்மைகளை மறைத்து 'ஃபிராடு' போல செயல்பட்டுள்ளது.. பிரசாந்த் பூஷன் கடும் வாதம்!

ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு பல உண்மைகளை மறைத்து ஃபிராட் போல செயல்பட்டு இருக்கிறது என்று மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு பல உண்மைகளை மறைத்து ஃபிராட் போல செயல்பட்டு இருக்கிறது என்று மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ரபேல் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது விசாரிக்கப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தி வருகிறது. இது தொடர்பான மறுசீராய்வு வழக்கு இரண்டு மாதமாக நடந்து வருகிறது. .

Rafale Deal: Government played a fraud role and hidden the truth says Bhushan in SC

இன்றே அனைத்து விசாரணைகளையும் முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதனால் அனைத்து மனுதாரர்களுக்கும் வாதம் செய்ய 1 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது.

பிளவுவாதிகளின் தலைவர் மோடி.. 'டைம்' இதழில் பரபரப்பு அட்டைப்பட கட்டுரை! பிளவுவாதிகளின் தலைவர் மோடி.. 'டைம்' இதழில் பரபரப்பு அட்டைப்பட கட்டுரை!

மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பல முக்கிய வாதங்களை தனது ஒரு மணி நேர வாதத்தில் வைத்தார். அதில்,

  • ரபேல் வழக்கு தொடர்பாக உடனடியாக எப்ஐஆர் பதிய வேண்டும்.
  • நாங்கள் ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரவில்லை. இதில் நடந்து இருக்கும் முறைகேட்டை விசாரிக்க சொன்னோம்.
  • மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தவறான, பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்து இருக்கிறது.
  • சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே அதை தாக்கல் செய்து விட்டதாக அரசு ஏமாற்றி உள்ளது. சிஏஜி அறிக்கை இப்படித்தான் இருக்கும் என்று பொய் சொல்லி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
  • மிக முக்கியமாக ஊழல் தடுப்பு சட்டங்களை இதில் வேண்டும் என்றே புறக்கணித்து இருக்கிறார்கள். ஒப்பந்தத்தில் இந்த விதிகளை கடைபிடிக்கவில்லை. இதை நீதிமன்றத்தில் மறைத்து இருக்கிறார்கள்.
  • இதேபோல் பல முக்கிய விஷயங்களை நீதிமன்றத்தில் அரசு தரப்பு மறைத்து, ஃபிராட் போல செயல்பட்டு இருக்கிறது.
  • 5 மில்லியன் யூரோவிற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. கடைசியில் அதைவிட 55.6% அதிகமாக ஒப்பந்தம் முடிக்கப்பட்டுள்ளது.
  • வங்கி உத்தரவாதம் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்பந்தம் செய்யும் குழுவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
  • மத்திய அரசுக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும், ஒப்பந்தம் செய்யும் குழுவிற்கும் இடையில் மோதல் நிகழ்ந்துள்ளது. பிரதமர் அலுவலகம் இதில் தலையிட்டு இருக்கிறது, என்று பூஷன் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English summary
Rafale Deal: Central Government played a fraud role and hidden the truth says Bhushan in SC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X