டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோர்ட்டில் பொய் சொல்லிவிட்டார்.. இதோ மாட்டிக்கொண்டார்.. ராகுல் பகீர் குற்றச்சாட்டு!

ரபேல் ஒப்பந்த தொடர்பாக பிரதமர் மோடி சுப்ரீம் கோர்ட்டில் பொய் சொல்லிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் பகீர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் ஒப்பந்த தொடர்பாக பிரதமர் மோடி சுப்ரீம் கோர்ட்டில் பொய் சொல்லிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் பகீர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளியாகி உள்ள பாதுகாப்பு துறையின் கடிதங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி, ரபேல் ஒப்பந்தம் நடந்த போது, தனியாக ரபேல் தொடர்பான பேரத்தை மறைமுகமாக நடத்தினார்.

வேறு சிலர் பயன் அடைய வேண்டும் என்று தனி பேரத்தை பேசினார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

ரபேல் வழக்கில் பொய்

ரபேல் வழக்கில் பொய்

ராகுல் காந்தி தனது பேட்டியில், ரபேல் ஆவணங்களை எல்லாம் மறைத்துதான் பிரதமர் மோடி ரபேல் வழக்கில் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ரபேல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு பொய் சொல்லியுள்ளது. அதனால்தான் தீர்ப்பு மாறி வந்தது. தற்போது அது இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

அதிபர் என்ன சொன்னார்

அதிபர் என்ன சொன்னார்

பிரான்ஸ் அதிபர் பிரதமர் மோடியை திருடர் என்று அழைக்கிறார். இது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சருக்கு தெரியுமா? நிர்மலா சீதாராமன் இது குறித்து கேள்வி எழுப்புவாரா? ஏன் இது தெரியாதது போல நிர்மலா சீதாராமன் நடிக்கிறார்.

நீங்களே சொல்லுங்கள்

நீங்களே சொல்லுங்கள்

மோடி கூறுகிறார், நாங்கள் ஊழல் வழக்குகளை பார்த்து பயந்துவிட்டோம் என்று. ஒரு கேள்வி கேட்கிறேன், இங்கு இருக்கும் பத்திரிக்கையாளரிடம், என்னையும், மோடியையும் உற்று பாருங்கள், யார் பயந்து இருக்கிறார், யார் நடுங்குகிறார் என்று தெரியும். மோடி பயப்படுவது முகத்திலேயே தெரிகிறது.

 என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

பிரதமர் மோடிக்கு என்ன மல்டிபில் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டரா? மோடி காலையில் ஒன்று பேசுகிறார், மாலையில் ஒன்று பேசுகிறார். ஒருநாள் தன்னை நாட்டின் காவலர் போல காட்டி நடிக்கிறார், இன்னொரு நாள் திருடனாக மக்களிடம் திருடுகிறார். அவருக்கு என்னதான் பிரச்சனை, என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

English summary
Rafale Deal: PM Modi himself robbed Air Force's Rs 30,000 crore and gave it to Anil Ambani says Rahul in Press Meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X