2ஜிக்கு ஒரு நியாயம்.. ரபேலுக்கு ஒரு நியாயமா? சுப்ரீம் கோர்ட்டில் கொதித்த பிரஷாந்த் பூஷன்!
டெல்லி: 2ஜி வழக்கில் திருடப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ரபேல் வழக்கிலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மத்திய அரசுக்கு எதிராக வாதம் வைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் வாதம் செய்த அரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் தேசிய பாதுகாப்பு குறித்து பேசினார். அது தொடர்பாக நிறைய விவாதங்களை வைத்தார்.

ரபேல் தேவை
கேகே வேணுகோபால் தனது வாதத்தில், ரபேல் விமானங்கள் நமக்கு உடனடியாக தேவை. அப்போதுதான் எப்-16 விமான தாக்குதலில் இருந்து நாட்டை காக்க முடியும். ரபேல் விமான பயிற்சிக்காக ஏற்கனவே விமானிகள் பிரான்ஸ் சென்றுவிட்டனர்.

தவறில்லை
இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ரபேல் வழக்கின் தீர்ப்பை மறுசீராய்வு மட்டுமே செய்கிறோம். ஏதாவது ஆதாரங்களை விட்டுள்ளோமா என்று பார்க்கிறோம். நாங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து இங்கு விவாதிக்கவில்லை. அதனால் அரசு தரப்பு ரபேல் விமான குறித்து கவலைப்பட வேண்டாம், என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டார்..

தேசம் பாதுகாப்பு
இந்த ரபேல்தான் தேசத்தை பாதுகாக்கும். ரபேலை வைத்து அரசியல் செய்கிறார்கள். சிஏஜி அறிக்கை நாடாளுமன்றம் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இதை பார்த்துக்கொள்ளும். இதில் சமர்பிக்கப்பட்ட திருடப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்க கூடாது, என்று கேகே வேணுகோபால் மீண்டும் குறிப்பிட்டார்.

கடும் கேள்வி
மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், ரபேல் ஆதாரங்களை தி இந்து, ஏஎன்ஐ இரண்டு நிறுவனங்களும் வெளியிட்டது. திருடப்பட்ட ஆவணங்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கலாம். 2ஜி வழக்கில் இப்படிப்பட்ட ஆவணங்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர், என்று குறிப்பிட்டார்.

ஒரு தவறும் இல்லை
அதேபோல் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் சோரி, ரபேல் ஆவணங்களை உலகமே பார்த்துவிட்டது. மக்கள் எல்லோர்க்கும் இதில் குளறுபடி நடந்து இருப்பது தெரியும். அதனால் கோர்ட்டும் அதை விசாரிப்பதில் தவறில்லை, என்றார். இதையடுத்து ரபேல் வழக்கு மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications