நான் ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்..பதில் சொல்லுங்கள்.. மோடியை தெறிக்கவிடும் ராகுல் காந்தி!
நல்ல ஆண்மகனாக என்னுடைய கேள்விக்கு பதில் அளியுங்கள் என்று ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: நல்ல ஆண்மகனாக என்னுடைய கேள்விக்கு பதில் அளியுங்கள் என்று ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ரபேல் விவகாரம் பெரிய பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. தினமும் ரபேல் தொடர்பாக காங்கிரஸ் பாஜக இடையே கடும் விவாதம் நடந்து வருகிறது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி வைத்து வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையில் இதில் நேரடி வாதம் நடந்துள்ளது.

நிர்மலா சீதாராமன்
ரபேல் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் பதில் அளிக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி இதுவரை பேசவே இல்லை.

ராகுல் என்ன சொன்னார்
இந்த நிலையில் நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ''பிரதமர் மோடி என்னை பார்த்து பயந்து ஓடுகிறார். மோடியால் ரபேல் விவாதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவர் நிர்மலா சீதாராமனை துணைக்கு அழைத்துள்ளார். தன்னால் பேச முடியவில்லை என்றதும், அவர் பெண் ஒருவரை தன்னை காக்கும்படி அழைத்துள்ளார்'' என்று கூறினார்.

என்ன பதில்
இதற்கு பதில் அளித்த பாஜக கட்சியினர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண் சமூகத்தை இழிவாக பேசிவிட்டார். பெண்ணின் உதவியை மோடி வேண்டுகிறார் என்று கூறி அவர் பெண்களை கிண்டல் செய்துள்ளார் என்று கூறினார்கள். அதோடு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
|
ராகுல் பதில்
தற்போது இதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். அதில் ''முழு மரியாதையுடன் ஒரு விஷயம் சொல்கிறேன். பெண்களை மதிப்பது நம்முடைய வீட்டில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் இப்படி சுற்றிக்கொண்டு இருக்காமல், நல்ல ஆணாக எனக்கு பதில் சொல்லுங்கள், நீங்கள் ரபேல் ஒப்பந்தத்தில் தலையிட்ட அதை மாற்றிய போது விமான படையோ, பாதுகாப்பு துறையோ உங்களை கேள்வி எழுப்பியதா? ஆமா? இல்லையா? சொல்லுங்கள்'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications