அதிகாலை 4 மணிக்கு.. வாக்காளர் பட்டியலை திருத்தும் கும்பல்! தேர்தல் ஆணையம் தூங்குகிறது-ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிகாலை 4 மணிக்கு, மோசடி கும்பல்கள் வாக்காளர்கள் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்ப்பதாகவும், உண்மையான வாக்காளர்களை நீக்குவதாகவும் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். இதனை தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையமோ தூங்கிக்கொண்டிருக்கிறது என்றும் ராகுல் விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிகாலை 4 மணிக்கு மோடி கும்பல்காரர்கள் எழுந்திருக்கிறார்கள். அவர்கள் வாக்காளர் பட்டியலில் லாக்-இன் செய்து, 36 விநாடிகளில் 2 உண்மையான வாக்காளர்களை நீக்குகிறார்கள். பின்னர் தூங்க சென்றுவிடுகிறார்கள். இப்படித்தான் வாக்காளர் பட்டியலில் மோசடி நடக்கிறது. தேர்தல் ஆணையம் விழிப்புணர்வுடன் இருக்கிறது. திருட்டை வேடிக்கை பார்க்கிறது, திருடர்களை பாதுகாக்கிறது" என்று விமர்சித்திருக்கிறார்.

Rahul Gandhi BJP Election Commission

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம், புதியதாக வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் இறங்கி இருந்தது. ஆணையம் வெளியிட்ட புதிய வாக்காளர் பட்டியலில் பலரின் பெயர் விடுபட்டிருந்ததாக சர்ச்சை எழுந்தது. அதேபோல கர்நாடக மாநிலத்தில் குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியிலும் போலியான வாக்காளர்கள் இணைக்கப்பட்டு இருப்பதாகவும், உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் புகார்கள் இருந்தன.

இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தாலும், ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலிலிருந்து உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து புகாரை முன்வைத்திருக்கிறார். ஆன்லைன் மூலம் வாக்காளர்களை நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்களை நீக்கும் முயற்சி நடந்து இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். நீக்கப்பட்ட வாக்காளர்கள், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதி மட்டுமே என்றும் கூறியிருக்கிறார்.

வாக்காளர் பட்டியலிலிருந்து எப்படி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து பேசிய ராகுல் காந்தி, "கோதாபாய் என்கிற பெண்ணின் பெயரை பயன்படுத்தி லாகின் அடையாள எண் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அவருக்கு தெரியாமலேயே 12 வாரங்களில் பல பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன. இப்படி வாக்காளர்களை நீக்க பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் அனைத்துமே போலியானவை மற்றும் சந்தேகத்துக்கு உரிய வெளி மாநில செல்போன் எண்களாக இருக்கிறது.

மற்றொரு சம்பவத்தில் சூரியகாந்தி என்பவர், அது பெயரிலிருந்து வெறும் 14 நிமிடங்களில் 12 வாக்காளர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. சரி அவர் நீக்கியது உண்மையாகவே போலியான வாக்காளர்களை தானா? என்று கேட்டால் கிடையாது. நீக்கப்பட்டவர்கள் உண்மையான வாக்காளர்கள். அவர்களில் சூரியகாந்த் மற்றும் பபிதா சவுத்ரி ஆகிய இருவர் தற்போது உங்கள் முன்னர் அமர்ந்திருக்கின்றனர்" என்று இருவரையும் கைகாட்டி ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.

மற்றொரு சம்பவத்தை குறிப்பிட்ட ராகுல் காந்தி நாகராஜ் என்பவர் பெயரில் லாகின் செய்யப்பட்டு அதிகாலை 4.07 மணிக்கு இரண்டு வாக்காளர்களின் நீக்குவதற்கான விண்ணப்பங்கள் 38 வினாடிகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், தனி நபர்கள் இதுபோல விண்ணப்பிப்பது சாத்தியமற்றது என்றும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இந்த விண்ணப்பங்கள் கால் சென்டர் மூலமாக சாப்ட்வேரை பயன்படுத்தி செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், வாக்காளர்களை நீக்குவது மட்டுமல்லாது போலி வாக்காளர்களும் இதன் மூலம் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.

போலி வாக்காளருக்கு எடுத்துக்காட்டாக ஒருவர் பெயரையும் முகவரியும் ராகுல் காந்தி வாசித்துக் காட்டினார். அவர் பெயர் 'yuh uqjjw' என்றும், முகவரி 'sasti,sasti' எனவும் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

கர்நாடகா மகாராஷ்டிரா பிஹார் ஹரியானா உத்தர பிரதேசத்திலும் இதே முறையில் வாக்காளர்கள் பட்டியலில் மோசடி நடைபெற்றிருக்கிறது என்றும், இந்த மோசடி பணிகளுக்கு பின்னால் இருப்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாக்கிறார் என்றும் ராகுல் காந்தி சரமாரியாக விமர்சித்திருக்கிறார்.

மட்டுமல்லாது ஆன்லைன் மூலமாக வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக சிஐடி போலீஸ் கடந்த 18 மாதங்களில் 18 கடிதங்களை அனுப்பி இருந்ததை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் பதில் தராததால், மோசடி கும்பலை தேர்தல் ஆணையம் பாதுகாக்கிறது என்றும் விமர்சித்திருக்கிறார்.

மேலும், கர்நாடக சிஐடி போலீஸார் கேட்கும் செல்போன் எண்கள், ஓடிபி விவரங்களை தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும் இல்லாவிட்டால் வாக்குத்திருட்டில் ஈடுபடுவோரை தலைமை தேர்தல் அதிகாரி தீவிரமாக பாதுகாக்கிறேன் என்பது உறுதியாக விடும் என்றும் விமர்சித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+