வங்கதேச பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு பங்கா? ராகுல் காந்தி கேட்ட 3 கேள்வி.. ஜெய்சங்கர் பதில் இதுதான்
டெல்லி: வங்கதேச விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். குறிப்பாக வங்கதேச பிரச்சினைக்கு பாகிஸ்தான் தலையீடு இருக்குமா? என்று ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கும் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.
வங்கதேச விவகாரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு இன்று அழைப்பு விடுத்தது. இந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேசத்தில் உள்ள சூழல் குறித்தும் இந்தியாவின் நிலைப்பாடு உள்ளிட்டவற்றை பற்றியும் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தி கேள்வி: அப்போது ராகுல் காந்தி மூன்று முக்கிய கேள்விகளை முன்வைத்து இருக்கிறார். ராகுல் காந்தி கேட்கும் போது, வங்கதேசத்தில் அதிகார மாற்றம் ஏற்பட உள்ள நிலையில், இந்தியாவின் குறுகிய கால மற்றும் நீண்ட கால யுக்திகள் என்ன? என்று கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ராகுல் காந்தியின் இந்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், வங்கதேசத்தில் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அப்போதுதான், அடுத்தகட்ட நமது முடிவை சிறப்பாக எடுக்கமுடியும்' என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தலையீடு?: இதையடுத்து, ராகுல் காந்தி முன்வைத்த மற்றொரு கேள்வியில், வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெறும் சம்பவத்தில் அன்னிய நாடுகள் குறிப்பாக பாகிஸ்தான் தலையீடு இருக்குமா? என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், இந்த கோணத்திலும் நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
அதேபோல, வங்கதேசத்தில் உள்ள சூழலுக்கு தகுந்தபடி பாகிஸ்தான் தூதரகம் தொடர்ந்து தனது சமூக வலைத்தள படத்தை மாற்றி வந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் ஏதேனும் இருக்குமா எனவும் விசாரிக்கிறோம் என ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.
இந்தியா எதிர்பார்த்ததா?: ராகுல் காந்தி எழுப்பிய மற்றொரு கேள்வியில், வங்கதேசத்தில் அடுத்தடுத்த ஏற்பட்ட இந்த திருப்பங்களை இந்தியா முன்கூட்டியே எதிர்பார்த்ததா? எனக் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், இந்தியா நிலமையை உன்னிப்பாக கண்காணித்து வந்தது" என்று பதிலளித்து இருக்கிறார்.
வங்கதேச பிரச்சினை: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்கள் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தன. வங்கதேசம் முழுவதும் வெடித்த மாணவர்கள் போராட்டங்களில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டத்தை ஷேக் ஹசீனா அரசால் முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை. இதனால் ராணுவம் தலையிட்டது.
ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என ராணுவ தளபதி கெடு விதித்ததால் அவர் தமது பதவியில் இருந்து விலகினார். மேலும் போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் டாக்கா இல்லத்தை முற்றுகையிட்டு சூறையாடத் தொடங்கினர். இதனால் வேறு வழியே இல்லாமல் உயிருக்கு அஞ்சி வங்கதேசத்தை விட்டு சகோதரி ரெஹானாவுடன் ஹெலிகாப்டர் மூலம் வெளியேறினார்.
இந்தியாவில் தஞ்சம்: வங்கதேசத்தை விட்டு தப்பிய நிலையில், தற்போது டெல்லி அருகே பாதுகாப்பான இடம் ஒன்றில் ஷேக் ஹசீனா தங்க வைக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நேற்று இரவே பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வங்கதேச நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று வங்கதேச நிலைமைகள் குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்துக் கட்சி கூட்டம்: இந்தக் கூட்டத்தில் வங்கதேச நிலைமை, இந்தியர்களின் பாதுகாப்பு, இந்துக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவரிக்கப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேச நிலைமை தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய நிலையில் வங்கதேசத்தில் இருந்து 12,000 முதல் 13,000 இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டிய அவசர நிலைமை இல்லை. இருந்தாலும் நிலைமையை கண்காணித்து வருகிறோம்" என்று கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications