டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுவா, ஆசியாவின் பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்கா.. மோடி சொன்னது பெரிய தப்பு- ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மெகா சோலார் திட்டம் ஆசியாவிலேயே மிகப் பெரியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது உண்மைக்குப் புறம்பான தகவல் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா சோலார் மின்சார திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். 750 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்ட நிலையம் இது ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ட்வீட் வெளியிட்டிருந்தார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்தில் முகேஷ் அம்பானி...கோட்டை விட்ட பிரபலங்கள்!!உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்தில் முகேஷ் அம்பானி...கோட்டை விட்ட பிரபலங்கள்!!

மோடி ட்வீட்

மோடி ட்வீட்

மோடி வெளியிட்ட ட்வீட்டில், மத்திய பிரதேசம், நர்மதை நதிக்கும், வெள்ளை புலிகளுக்கும் பெயர் பெற்றதாக விளங்கியது. இனிமேல் ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையத்துக்கும் பெயர் பெற்றதாக விளங்கப் போகிறது என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான், ராகுல் காந்தி இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார்.

ராகுல் காந்தி விமர்சனம்

ராகுல் காந்தி விமர்சனம்

'அசத்தியாகிரகி' என்ற ஹிந்தி வார்த்தையை அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அர்த்தம், உண்மையை நம்பாதவர் அல்லது பொய் சொல்பவர் என்பதாகும். அதாவது நரேந்திர மோடி இந்த விஷயத்தில் உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்தார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு அவர் கூறுவதற்கு காங்கிரஸ் கட்சியிடம் ஒரு காரணம் இருக்கிறது.

கர்நாடகாவில் 2000 மெகாவாட்

கர்நாடகாவில் 2000 மெகாவாட்

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே. சிவகுமார் இதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர். அவர் கூறுகையில், ரேவா சோலார் பார்க் 250 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்டது. இதை எப்படி ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையம் என்று மத்திய அரசு கூறுகிறது என்பதற்கு விளக்கம் தேவைப்படுகிறது. ஏனெனில் கர்நாடக மாநிலம், பாவகடா பகுதியில் உள்ள சூரிய மின்சக்தி நிலையம் 2000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடியது. இரண்டு வருடங்கள் முன்பாக இது திறக்கப்பட்டது. இவ்வாறு சிவகுமார் தெரிவித்தார்.

Recommended Video

    Vikas dubey கதையை முடித்த தமிழர் தினேஷ் குமார்
    யூனிட் விவகாரமா

    யூனிட் விவகாரமா

    மத்திய அரசு எதற்காக இப்படி சொன்னது? கர்நாடகாவில் உள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதா, இல்லையா என்பது பற்றி எதுவும் இதுவரை தெரியவில்லை. மத்திய அரசு இதற்கு என்ன பதில் கூற உள்ளது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேநேரம் பாஜக ஆதரவாளர்களோ, பாவகடா சிங்கிள் யூனிட் கிடையாது. ரேவா சிங்கிள் யூனிட் என்பதால், மோடி இவ்வாறு கூறியதாக பதில் தெரிவிப்பதை கவனிக்க முடிகிறது.

    English summary
    Rahul Gandhi attacks PM Modi over Asia's Largest Solar Project tweet, here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X