"இந்திய வரைபடத்தை மொத்தமாக மாற்றி அமைக்க பாஜக முயல்கிறது!" ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் இப்போது தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடந்து வரும் சூழலில், இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவே கிடையாது என்ற ராகுல் காந்தி இந்திய வரைபடத்தையே மாற்ற பாஜக முயல்கிறது என்றும் விமர்சித்தார்.

நமது நாட்டில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு கொண்டு வர முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்காகத் தொகுதி மறுவரையறை செய்யவும் முடிவு செய்துள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் தொகுதிகளை எப்படி மாற்றி அமைப்பது தொடர்பான மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.

Rahul Gandhi Criticizes Delimitation Bill 2026

நேற்றைய தினம் லோக்சபாவில் இது தொடர்பாகப் பிரமதர் மோடி உரையாற்றி இருந்தார். இதற்கிடையே தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்,

முதலில் தனது தாயார் பற்றிப் பேசி உரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, தனது தாயை முதல் ஆசான் எனக் குறிப்பிட்டார். தொகுதி மறுசீரமைப்பு மூலம் இந்திய வரைபடத்தையே மாற்ற பாஜக முயல்கிறது என்று சாடிய ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உண்மையை எடுத்துச் சொல்வதால் மத்திய அரசுக்கு ஏன் கசக்கிறது என்றும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவே கிடையாது என்றும் விமர்சித்தார்.

மேலும், இந்தியப் பெண்களின் பின்னால் ஒளிந்து கொள்ளும் வெட்கக்கேடான செயலை பாஜக செய்கிறது என்றும் அவர் சாடினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+