Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி ஆத்மாவுடன், பரமாத்மாவே நேரடியாக பேசுவார்.. ஆனால்.. லோக்சபாவில் கலாய்த்து தள்ளிய ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவை முதல் கூட்டத் தொடரிலேயே பாஜகவை தனது பேச்சால் திணறடித்துள்ளார் காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி. பிரதமர் மோடி, பரமாத்மாவுடன் கூட பேசுவார்.. ஆனால் மணிப்பூர் மக்களுடன் பேச மாட்டார் என கடும் விமர்சனம் செய்தார்.

நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலை அடுத்து எம்பிக்கள் நாடாளுமன்ற கட்டிடத்தில் பதவி ஏற்று கொண்டனர். இதை அடுத்து முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

rahul gandhi narendra modi parliament

ஆனால், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை கூறலாம் என சபாநாயகர் கூறியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். "வாழ்க அரசியல் சாசனம்" என ராகுல் காந்தி தனது பேச்சை தொடங்கிய போது பாஜகவினர் "பாரத் மாதா கி ஜே" என முழக்கம் இடத்தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அவர்களை சபாநாயகர் சமாதானம் செய்தார். தொடர்ந்து ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசினார். தற்போது நாங்கள் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாத்திருக்கிறோம்.. என் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன. நான் வசித்த வீட்டை பாஜக பறித்துக் கொண்டது. ஆனாலும் தொடர் தாக்குதல்களில் இருந்து அரசியல் சாசனத்தை நாங்கள் காப்பாற்றி வருகிறோம்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக கூறுகிறார். அவர் நேரடியாகவே பரமாத்மாவுடன் பேசுவார். பரமாத்மாவும் நேரடியாகவே மோடியின் ஆன்மாவோடு பேசுவார். நாம் எல்லோரும் பயாலஜிக்கலாக பிறப்போம்.. மரணத்தை தழுவுவோம்.. ஆனால் பிரதமர் அப்படிப்பட்டவர் அல்ல.. அவர் "நான்-பயாலஜிக்கல்." அவர் பரமாத்மாவிடம் கேட்டு தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தாரா?

இவ்வளவு சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி, திரைப்படத்தின் வழியாகத்தான் காந்தி மீண்டும் உலகால் அறியப்பட்டார் என்கிறார். பிரதமர் மோடியின் அறியாமையை உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடிகிறதா? பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. அவர்கள் இந்து மதத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசியபோது, பாஜகவினர் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

மேலும், ராகுலின் பேச்சு, இந்து சமூக மக்கள் மீதான தாக்குதல் என்றும், இந்துக்களை அவர் வன்முறையாளர்கள் போல சித்தரிக்க முயலுகிறார் என்றும் பிரதமர் மோடி குறுக்கிட்டுக் கூறினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, மோடி இந்தியாவின் பிரதமர் தான்.. இந்துக்களின் பிரதிநிதி அல்ல, உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள்” என பேசினார். அதற்கு அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ராகுல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக எம்பிகள் முழக்கமிட்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+