ஆக்சிஜன் பற்றாக்குறையால்.. நோயாளிகள் உயிரிழப்புக்கு மோடி அரசுதான் காரணம்.. விளாசி தள்ளும் ராகுல்!
டெல்லி: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக பலர் தொடர்ந்து இறந்து வருகின்றனர். இந்த நிலைக்கு மத்திய அரசுதான் காரணம் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டை விட இந்த 2021-ம் ஆண்டு இந்தியாவை வச்சு செய்து வருகிறது. இதுக்கு கடந்த ஆண்டே பரவாயில்லை என்பதுபோல் ஓயாத கொரோனா மக்களை துன்பப்படுத்தி வருகிறது.

ஏளனமாக சிரிக்கும் கொரோனா
போன வருடம் கொரோனவை ஒழிக்க தடுப்பு மருந்துகள் கைவசம் இல்லை. ஆனாலும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதிய படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் இருந்தன. ஆனால் இந்த முறை நமது கையில் தடுப்பு மருந்துகள் இருந்தாலும் கொரோனா நம்மை ஏளனமாக பார்த்து சிரிக்கிறது.

தொடர் உயிரிழப்பு
மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் உள்ளிட்ட போதிய வசதிகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத கையறு நிலை போன்றவையே கொரோனா நம்மை ஏளனமாக பார்த்து சிரிப்பதற்கு காரணம். ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

மத்திய அரசு முயற்சி
மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாட்டை தீர்க்க முயற்சித்தல், விமானம், ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு வந்து பிரச்சினையை சமாளிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மத்திய அரசு சரியாக கையாளவில்லை. இந்த பேரழிவு நிலைக்கு இதுதான் காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மத்திய அரசுதான் காரணம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் மத்திய அரசை கடுமையாக வறுத்தெடுத்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- " கொரோனா தொற்று நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக பலர் தொடர்ந்து இறந்து வருகின்றனர்.. மத்திய அரசே இந்த நிலை உங்களால்தான் ஏற்பட்டது" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications