காலையில் பாஜகவுக்கு ஷாக்..ரேபரேலியில் சண்டை செய்யும் ராகுல்! அமேதியில் யாரு? காங். கொடுத்த அப்டேட்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமேதி தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் இந்தியா முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் மிச்சம் இருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா காங்கிரஸின் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும், அந்தந்த மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல்: வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி 7 மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவானது நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பாஜக அசுர பலத்துடன் இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் வருகின்ற இருபதாம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் நடந்து நடக்க இருக்கிறது.
அமேதி, ரேபரேலி: அந்த மாநிலத்தில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ரேப்ரேலி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. அங்கு தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக இருக்கிறார். இதே மாநிலத்தில் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதியில் கடந்த தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் தோல்வியை தழுவினார்.
ராகுல்காந்தி: இதை அடுத்து நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதிகளில் 20ஆம் தேதி தேர்தல் ஆனது நடைபெற இருக்கும் நிலையில் விதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்காமலே இருந்தது. இதனால் அந்த தொகுதிகள் தேசிய அளவில் கவனம் பெற்றன. வேட்பாளர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை நடத்திய நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்ற முடிவை மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பார் எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

மீண்டும் போட்டி: இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போல அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியை சந்தித்த நிலையில், கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்றார். அந்த சென்டிமென்ட் காரணமாகவே தற்போது மீண்டும் வயநாட்டில் அவர் களமிறங்கி இருக்கும் நிலையில் , ரேபரேலியிலும் அவர் போட்டியிடுவார் என காங்கிரஸ் தரப்பு அறிவித்திருக்கிறது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications