‛திருடன்’ குட்டிக்கதை கூறிய ராகுல்.. மீண்டும் அதே வார்த்தையா? தகுதி நீக்கத்துக்கு பின் கடும் அட்டாக்
டெல்லி: எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தகுதி நீக்கத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை அடுக்கி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த வேளையில் அவர் ‛திருடன்' என ஒரு குட்டிக்கதை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து நேற்று ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் ராகுல் காந்தியை எதிர்கொள்ள பாஜக பயப்படுவதால் தான் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராகுல் காந்தி பேட்டி
இந்நிலையில் தான் டெல்லியில் இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையேயான தொடர்பு பற்றி கேள்வி கேட்டதற்கு என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர் என பகீரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும் தன்னை பற்றி பாஜக அமைச்சர்கள் பொய்களை பரப்புவதாகவும், தகுதி நீக்கம் செய்தாலும், சிறையில் அடைத்தாலும் உண்மையை எப்போதும் பேசுவேன் என ராகுல் காந்தி கூறினார்.

‛திருடன்’ என குட்டிக்கதை
அதன் பிறகு பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அப்போது அதானி விவகாரம் தொடர்பான ராகுல் காந்தியின் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி திருடன் என்ற சொல்லை பயன்படுத்தி குட்டிக்கதை போல் ஒன்றை கூறினார்.

திருடனை பிடித்தால்...
அப்போது, ‛‛நாம் முதலில் திருடனை பிடித்தால் திருடவில்லை என்ன கூறுவார்?. நான் திருடவில்லை என்பார். அதன்பிறகு அங்கே பாருங்கள்.. இங்கே பாருங்கள்.. என பலரை சுட்டிக்காட்டி அவர்கள் தவறு செய்யவில்லையா? என கேள்வி எழுப்புவார். நான் கேட்பது ஒன்று மட்டுமே. அதானி விவகாரத்தில் ரூ.20 ஆயிரம் கோடி எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? அது அதானியின் பணம் அல்ல. ஓபிசி பிரிவினரை அவமானப்படுத்தியதாக கூறுவதும், என் மீதான தற்போதைய தகுதி நீக்கம் செய்தது என்பதும் அதானி விவகாரத்தை திசைதிருப்புவதற்கான நோக்கமே ஆகும்'' என்றார்.

மீண்டும் திருடன்
ராகுல் காந்தி தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் என்பது மோடி என்ற பெயர் மட்டுமின்றி அவர் அன்று பயன்படுத்திய திருடன் என்ற சொல்லும் தான். இந்நிலையில் தான் தகுதி நீக்கத்துக்கு பிறகு ராகுல் காந்தி தனது முதல் பிரஸ்மீட்டிலேயே திருடன் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications